சுவையான ஆட்டுக்கால் பாயா செஞ்சிருக்கீங்களா? இதோ ரெசிபி

சுவையான ஆட்டுக்கால் பாயா செஞ்சிருக்கீங்களா? இதோ ரெசிபி

ஆட்டுக்கால் பாயா

சுவையான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • Share this:
    சன்டே சமையலில் ஆட்டுக்கால் பாயா செய்து பாருங்கள். அப்புறம் எல்லா வாரமும் உங்கள் வீட்டில் அனைவரும் இதைதான் கேட்பார்கள்.

    தேவையானப் பொருட்கள் :

    வேக வைக்க :

    ஆட்டுக்கால் - 4
    வெங்காயம் - 3
    தக்காளி - 2
    பச்சை மிளக்காய் - நான்கு
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
    மிளகு தூள் - 2 தேக்கரண்டி
    தனியாத்தூள் - 2 மேசைகரண்டி
    உப்பு - தே. அளவு
    தேங்காய் - அரை மூடி

    தாளிக்க :

    எண்ணெய்
    பட்டை, ஏலம், கிராம்பு - சிறிதளவு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
    கொத்தமல்லி - ஒரு கொத்து
    புதினா - சிறிதளவு

    செய்முறை :

    முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன்பிறகு தேங்காயை நைசாக அரைத்து கொள்ள வேண்டும். ஆட்டுக்காலை நல்ல தேய்த்து கழுவி அதில் உள்ள முடி எல்லாம் எடுத்த பின் நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.

    அதன் பின்னர் குக்கரில் ஆட்டுக்கால் , நறுக்கிய வெங்காயம்,  இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, உப்பு , மிளகு தூள், தனியா தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு கிளறி தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு பதினைந்து நிமிடம் அதிக தீயிலும், பதினைந்து நிமிடம் சிம்மிலும் வேகவைத்து இறக்க வேண்டும்.

    விசில் போனதும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு கொதிக்கவிடவும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின் மீதம் உள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி மீதமுள்ள இஞ்சிபூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி, புதினா சேர்த்து கொதித்து கொண்டிருக்கும் ஆட்டு கால் பாயாவில் கொட்டி இறக்கவும். சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.

    இதை இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால் சுவையான இருக்கும்.

    மேலும் படிக்க... சுவையான சிக்கன் கீமா ரெசிபிகள் - வீட்டிலேயே செய்யலாம்!



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: