முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / டார்க் சாக்லேட்ஸ் உண்மையில் ஆரோக்கியமானதா..? எதிர்மறை விளைவுகளை பற்றி எச்சரிக்கும் மருத்துவர்

டார்க் சாக்லேட்ஸ் உண்மையில் ஆரோக்கியமானதா..? எதிர்மறை விளைவுகளை பற்றி எச்சரிக்கும் மருத்துவர்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

சில டார்க் சாக்லேட்ஸ்களில் ஈயம் மற்றும் காட்மியம் ஆகிய இரண்டு ஹெவி மெட்டல்ஸ் இருக்கின்றன. இவை இரண்டுமே பல உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருப்பதாக மருத்துவர் விளக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலர் டார்க் சாக்லேட்டுகளை மிகவும் விரும்பி சாப்பிடுகிறோம்.  குக்கீஸில் சில டார்க் சாக்லேட் பிட்ஸ்களை தூவுகிறோம். டார்க் சாக்லேட்ஸை ஆரோக்கியமான ஒன்றாக நாம் கருதுகிறோம். எனவே இவற்றை தயக்கமின்றி பலர் மகிழ்ச்சியாக சாப்பிடுகிறார்கள். உண்மையில் டார்க் சாக்லேட்டுகள் ஆரோக்கியமானதா?

டார்க் சாக்லேட்ஸ்களை சாப்பிடுவதால் கிடைக்கும் சாத்திய நன்மைகள் அவற்றை மிதமாக எடுத்து கொள்வதுடன் தொடர்புடையவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். டார்க் சாக்லேட் அதிக அளவு சாப்பிடுவது குறிப்பாக மில்க் சாக்லேட் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட சாக்லேட்ஸ்களை அதிகம் சாப்பிடுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சுதிர் குமார் பேசுகையில், டார்க் சாக்லேட்ஸ் உண்மையில் அதிக தீங்கு விளைவிக்க கூடியவை என்கிறார். சோஷியல் மீடியாவில் அவர் ஷேர் செய்த சமீபத்திய போஸ்ட்களில் டார்க் சாக்லேட்ஸ்களின் இருண்ட பக்கம் பற்றி பல தகவல்களை வெளிப்படுத்தினார். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் குறைந்த சர்க்கரை உள்ளடக்கம் போன்றவற்றின் காரணமாக கிடைக்கும் சாத்திய ஆரோக்கிய நன்மைகள் டார்க் சாக்லேட்ஸ்களை பிரபலமாக்கி இருப்பதாக குறிப்பிட்டார். இருப்பினும், இந்த "ஆரோக்கியமான" டார்க் சாக்லேட்ஸ்கள் எதிர்மறையான பக்கத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் சுதிர் குமார்.

https://twitter.com/hyderabaddoctor/status/1618576566774292485

சில டார்க் சாக்லேட்ஸ்களில் ஈயம் மற்றும் காட்மியம் ஆகிய இரண்டு ஹெவி மெட்டல்ஸ் இருக்கின்றன. இவை இரண்டுமே பல உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருப்பதாக மருத்துவர் விளக்கியுள்ளார். கன்ஸ்யூமர் ரிப்போர்ட் சயின்டிஸ்ட்ஸ் சோதனை செய்த பல டார்க் சாக்லேட் மாதிரிகளில் காட்மியம் மற்றும் ஈயம் ஆகிய 2 கனரக உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி கூறி இருக்கும் மருத்துவர் சுதிர் குமார், ஹெவி மெட்டல்ஸ் பல உடல்நல பிரச்சினைகளுக்கு காரணமாகும். மற்றவர்களை விட கர்ப்பிணி பெண்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் அதிக டார்க் சாக்லேட்ஸ்களின் நுகர்வால் ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது. ஏனெனில் மெட்டல்ஸ் வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தலாம், மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம் மற்றும் குறைந்த IQ-விற்க்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் பெரியவர்கள் அதிகம் ஈயம் அடங்கிய பொருளை அடிக்கடி நுகர்வது நரம்பு மண்டல பிரச்சனைகள், உயர் ரத்த அழுத்தம், நோயெதிர்ப்பு அமைப்பு குறைபாடு, சிறுநீரக பாதிப்பு மற்றும் இனப்பெருக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர் எச்சரித்தார். இருகனரக மெட்டல்ஸ் கலந்த டார்க் சாக்லேட்ஸ்களை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்களை பற்றி அவர் எச்சரித்த அதே வேளையில் அபாயத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பதையும் அவர் பரிந்துரைத்தார். குறைந்த ஈயம்/காட்மியம் கன்டென்ட் கொண்ட டார்க் சாக்லேட்ஸ்களை உட்கொள்ளலாம்.

Also Read : மாதவிடாய் காலத்தில் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்..!

இல்லை என்றால் எப்போதாவது டார்க் சாக்லேட்ஸ்களை எடுத்து கொள்ளலாம் அல்லது மில்க் சாக்லேட்ஸ்களுடன் குறைந்த உலோக உள்ளடக்கம் கொண்ட சாக்லேட்ஸ்களை மாற்றி மாற்றி சாப்பிடலாம் என பரிந்துரைத்துள்ளார். குறைந்த கோகோ உள்ளடக்கம் கொண்ட சாக்லேட்ஸ்களை உட்கொள்வது இன்னும் சிறந்தது என்கிறார். அடுத்த முறை நீங்கள் உங்களுக்கு பிடித்த டார்க் சாக்லேட்ஸ்களை சாப்பிடும் போது அவை உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை பற்றி சிந்தியுங்கள். நிபுணரின் கூற்றுப்படி எந்த டார்க் சாக்லேட்ஸாக இருந்தாலும் அவற்றை மிதமான அளவு உட்கொள்வது நிச்சம் ஒரு சிறந்த யோசனையாகும்.

First published:

Tags: Chocolate, Health tips, Homemade chocolates