Home /News /lifestyle /

ஆரோக்கியத்தை மேம்படுத்த தவிர்க்க வேண்டிய உணவுகள்!

ஆரோக்கியத்தை மேம்படுத்த தவிர்க்க வேண்டிய உணவுகள்!

 உணவுகள்

உணவுகள்

இதுவரை நீங்கள் புத்தாண்டு தீர்மானம் எடுக்கவில்லை என்றால், இந்த ஆண்டு உடல் நலத்தை கருத்தில் கொண்டு பின்வரும் உணவுகளைத் தவிர்க்கலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், உடல் நலம் பற்றிய விழிப்புணர்வும் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பெரும்பாலானவர்களின் புத்தாண்டு தீர்மானமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதாகவே காணப்படுகிறது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் ஒரு சில உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இதுவரை நீங்கள் புத்தாண்டு தீர்மானம் எடுக்கவில்லை என்றால், இந்த ஆண்டு உடல் நலத்தை கருத்தில் கொண்டு பின்வரும் உணவுகளைத் தவிர்க்கலாம்.

வெள்ளை பிரட் :



சில ஆண்டுகளுக்கு முன்புவரை பிரட் என்பது காய்ச்சல் உணவு என்று அழைக்கப்பட்டு வந்தது. அதாவது, காய்ச்சல் ஏற்பட்டால் மட்டுமே பிரட் சாப்பிடும் பழக்கம் இருந்தது. தற்போது அன்றாட உணவுகளில் ஒன்றாக பிரட் மாறிவிட்டது. பிரட்டில் பலவிதங்கள் உள்ளன. அதில் அதிகமாக பயன்படுத்தப்படும் வெள்ளை பிரட்டில் சுத்திகரிக்கப்பட்ட மைதா மற்றும் சர்க்கரை அதிக அளவில் உள்ளன.

சுத்திகரிக்கப்பட்ட மைதாவில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வெள்ளை பிரட் அதிக கலோரிகளையும் கொண்டுள்ளது. இதனால் உங்கள் உடல் எடை கூடும். மேலும், பிரட் சுவையாக இருப்பதால் சுலபமாக, மிகவும் அதிகமாக சாப்பிட்டு விடுவீர்கள். எனவே, வெள்ளை பிரட்டை தவிர்க்க வேண்டும். மாற்றாக பிரவுன் பிரட் என்று முழு கோதுமையில் இருந்து செய்யப்படும் பிரட் வகை மற்றும் சிறுதானியங்கள் பயன்படுத்தி செய்யப்படும் பிரட் வகைகளை சாப்பிடலாம்.

கேக் மற்றும் பேஸ்ட்ரி :


பிரட் போலவே கேக் மற்றும் பேஸ்ட்ரி எனப்படும் இனிப்பு வகைகளில் சுத்திகரிக்கப்பட்ட மைதா மற்றும் சர்க்கரை மிக அதிக அளவு உள்ளன. இவை அதிக கலோரிகளைக் கொண்டதோடு மட்டுமல்லாமல், உங்களை அதிகமாக சாப்பிட தூண்டும் அளவுக்கு சுவையானது. மேலும், இதில் ஊட்டச்சத்தும் குறைவாக உள்ளது. இவ்வகையான அதிக கலோரி குறைவான ஊட்டச்சத்து கொண்ட பொருட்களை தவிர்க்க வேண்டும்.

பழச்சாறுகள் :



பிற பானங்களுடன் ஒப்பிடும்பொழுது பழச்சாறு ஆரோக்கியமானது என்று பலரும் பழச்சாறுகளை குடிக்கின்றனர். பழங்களுடன் ஒப்பிடும் பொழுது பழச்சாறுகளில் ஊட்டச்சத்து குறைவு. அதுமட்டுமின்றி சர்க்கரை அளவு அதிகரிப்பதால் பழச்சாறுகளும் அதிக கலோரி கொண்ட உணவாகத்தான் மாறுகிறது. முழு ஆரஞ்சில் இருக்கும் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும் வயிறு நிறைந்த உணர்வு எதுவுமே ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸில் கூட கிடைக்காது.

ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் தயாரிக்க உங்களுக்கு குறைந்தது 3 பழங்களாவது தேவை. ஆரஞ்சு பழங்களை சாறெடுக்கும் போது அதில் நார்ச்சத்து குறைந்துவிடுகிறது. அதுமட்டுமின்றி சுவைக்காக சேர்க்கப்படுபவை  கலோரிகளை அதிகரிக்கிறது. எனவே பழச்சாறுகளை விட பழங்களை சாப்பிடுவது நல்லது.

ஐஸ்கிரீம் :



குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட்டால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என்பவர்களைத் தவிர்த்து எல்லாருமே ஐஸ்கிரீம் பிரியர்கள் தன. அதிக கலோரி, அதிக சர்க்கரை மற்றும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கும் என்பதைத் தெரிந்தே சாப்பிடும் உணவுகளில் ஒன்று ஐஸ்கிரீம். எனவே, அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவதை குறைத்தாலே, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பீர் :



பெரும்பாலான ஆண்கள் ’பீர் குடிப்பது நல்லது, அதில், ஆல்கஹால் குறைவாகத்தான் இருக்கிறது. இதனால் ஆரோக்கியத்திற்கு எந்த கேடும் இல்லை’ என்று தவறாக நினைக்கிறார்கள். ஊட்டச்சத்து இல்லாத அதிக கலோரி கொண்டது பீர். அதுமட்டுமில்லை பீர் குடிக்கும் போது உடன் அதிகமாக உணவுகளை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு உள்ளது இதனால் எடை அதிகரிக்கும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: New Year, New Year 2022

அடுத்த செய்தி