ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அனுமன் ஜெயந்திக்கு மிளகு வடை செய்வது எப்படி?

அனுமன் ஜெயந்திக்கு மிளகு வடை செய்வது எப்படி?

ஹனுமன் ஜெயந்திக்கு மிளகு வடை

ஹனுமன் ஜெயந்திக்கு மிளகு வடை

hanuman Jayanthi 2022 | உளுந்து வடைக்கு சேர்க்கும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவை இதில் சேர்க்கப்படுவதில்லை. சுவையான மிளகு வடை செய்முறை எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மிளகு மற்றும் உளுந்து ஆகியவற்றைக் கொண்டு மிளகு வடை செய்யப்படுகிறது. மிளகு வடை உடலுக்கு மிகவும் நல்லது. மிளகு வடைகளையே கோர்த்து வடை மாலையாக, ஆஞ்சநேயருக்கு சாற்றுகின்றனர். அனுமன் ஜெயந்திக்கு இந்த மிளகு வடையைதான் நெய்வேத்தியமாக படைப்பார்கள்.இந்த வடை பெருமாள் கோவில்களிலும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்

மிளகு - 1 டீஸ்பூன்

அரிசி மாவு - 1 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

1. உளுத்தம் பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு வடிகட்டியில் போட்டு வைக்கவும்.

2. மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். மிக்ஸியில் உளுத்தம் பருப்பை போட்டு, தண்ணீர் எதுவும் சேர்க்காமல், கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

3. அரைத்த உளுந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். ஒரு சுத்தமான ஈரத்துணியில், ஒரு சிறிதளவு அளவிற்கு மாவை எடுத்து வைத்து, மெல்லிய வடையாகத் தட்டவும். வடையை துணியிலிருந்து கவனமாக எடுத்து, காய்ந்த எண்ணெய்யில் போட்டு, அரை வேக்காடாகப் பொரித்தெடுக்கவும்.

Also see... அனுமன் ஜெயந்தி 2022: விரதம் இருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

5. எல்லா மாவையும் இப்படியே பொரித்தெடுக்கவும். பின்னர், மீண்டும் 4 அல்லது 5 பொரித்த வடைகளை எண்ணெய்யில் போட்டு, நன்றாக சிவக்கும் வரை பொரித்தெடுக்கவும்.

First published:

Tags: Festival, Food