சமீப காலமாகவே, என்ன உணவுகளை சாப்பிடுகிறோம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதையொட்டி, உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை அவ்வபோது பல விதமான டிரெண்டுகள் உருவாகும். ஆர்கானிக் உணவுகள், கார்ப் இல்லாத உணவுகள், வீகன் உணவுகள், முழுக்க முழுக்க கொழுப்பு மட்டுமே இருக்கும் கீட்டோ உணவுகள், ஜிஎம்ஓ இல்லாத உணவுகள் என்று அவ்வபோது பல விதமாக உணவு வகைகள் பிரிக்கப்பட்டு, மக்களிடையே பரவலாக பயன்படுத்தப்படும்.
அதிலும், ஊட்டச்சத்து, எடை குறைப்பு என்று வரும் போது, உணவு கட்டுப்பாட்டுக்கு பல விதமான புதிய முறைகள் பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்படும். பிடித்த உணவை சாப்பிட முடியவில்லையே என்று பலரும் வருந்தும் நிலையில், சில உணவுகளை சாப்பிட்டாலே மிகப்பெரிய பாவம் செய்தது போல எண்ணம் தோன்றும். இதுவும் ஒரு உத்தியாகப் பயன்படுத்தி, சாப்பிடும் போது குற்றஉணர்வு ஏற்படாது என்ற ரீதியில், guilt free food என்ற ஒரு புதிய டிரெண்ட் உருவாகியுள்ளது.
எனவே, ஆரோக்கியமான உணவு மற்றும் ஒவ்வொரு உணவும் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று கவனித்து சாப்பிடும் மக்களிடையே, சுகர் ஃப்ரீ உணவுகள், குறைவான கலோரிகள் உணவுகள், போல இப்போது கில்ட் ஃப்ரீ உணவுகள் என்பது பரவி வருகிறது. இந்த உணவுகளில் குறைவான சர்க்கரை, குறைவான கலோரிகள் மற்றும் கொழுப்பு அல்லாத உணவுகளாக ஆல்-ரவுண்டர் கலவையாக கூறப்படுகிறது. பல பிராண்டுகளும் இவற்றை ஹைலைட் செய்து, மக்களை ஈர்க்கிறார்கள்.
ஆனால், உண்மையிலேயே கில்ட்-ஃப்ரீ உணவுகள் அத்தகைய நன்மைகளைக் கொண்டுள்ளனவா? இதற்கு பிரபல ஊட்டச்சத்து நிபுணர் புவன் ரஸ்தோகி விளக்கியுள்ளார்.
Guilt free உணவுகள் என்ற ஃபேன்சியான வார்த்தையை பயன்படுத்தி, பல பிராண்டுகளும் மக்களை மாய வலைக்குள் விழ வைக்கிறார்கள் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். அதற்கான விளக்கத்தையும் பகிர்ந்திருந்தார்.
View this post on Instagram
மேலே உள்ள புகைப்படத்தில் சாக்லேட் சிப் குக்கீ ஒரு கில்ட்-ப்ரீ உணவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஊட்டச்சத்து அட்டவணையில், 100 கிராம் உணவில் 500+ கலோரிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே போல மற்றொரு ஊட்டச்சத்து அட்டவணையில், கில்ட்-ஃப்ரீ உணவு சுத்திகரிக்கப்பட்ட மைதா, சர்க்கரை, எமல்சிஃபையர் மற்றும் பாமாயில் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உட்பொருட்கள் எதுவுமே ஆரோக்கியமானது அல்ல.
சமைத்த சிக்கனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!
நுகர்வோரை ஏமாற்ற, விலையை அதிகரிக்க, ஊட்டச்சத்து குறைவான மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களைக் கொண்ட உணவுப் பொருட்களையே பிரண்டுகள் guilt free உணவுகள் என்று மார்க்கெடிங் செய்கின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உண்மையில், இதே பொருட்கள் மார்க்கெட்டில், கடைகளில் மிகவும் சாதாரணமாக எந்த வித லேபிள்களும் இல்லாமல் மலிவு விலையில் கிடைக்கும். ஆரோக்கிய லேபிளை சேர்த்து, பல மடங்கு விலையில் விற்கப்படும் உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானவை இல்லை!
மேலும், நீங்கள் சாப்பிட விரும்பும் உணவை, உங்களுக்கு பிடித்த எந்தவிதமான குற்று உணர்ச்சியும் ஏற்படாமல் மகிழ்ச்சியாக சாப்பிடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy Food, Keto Diet, Vegan diet