கல்லீரலைக் காக்கும் கீரை! இருதயத்தைப் பாதுகாக்கும் இரும்புச்சத்து

உடல் பருமன் தான் கல்லீரல் தொடர்பான பல பிரச்னைகளுக்குக் காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Web Desk | news18
Updated: December 24, 2018, 12:51 PM IST
கல்லீரலைக் காக்கும் கீரை! இருதயத்தைப் பாதுகாக்கும் இரும்புச்சத்து
உடல் பருமன் தான் கல்லீரல் தொடர்பான பல பிரச்னைகளுக்குக் காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Web Desk | news18
Updated: December 24, 2018, 12:51 PM IST
உடல் பருமன், மதுப்பழக்கம் ஆகியவற்றால் கல்லீரல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கல்லீரல் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் கீரைகள்தான் முக்கியத் தீர்வாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து உடல்நலக் கேடுகள் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாக உடல் பருமனும், மதுப்பழக்கமும் பட்டியலிடப்படுகின்றன. கல்லீரலைப் பாதிப்பதில் இருந்து காப்பதற்காக கீரைகள் மிகவும் உதவுகின்றன. காய் வகைகளில் முட்டைக்கோஸ் பெரிதும் உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கீரைகள், முட்டைக்கோஸ் ஆகியவற்றில் உள்ள நைட்ரேட் கல்லீரலில் கொழுப்புச்சத்து சேராமல் தடுக்கிறது. இந்த உணவு வகைகளை உட்கொள்ளும் போது நீரிழிவு பிரச்னைகள், இருதய பாதிப்புகள், ரத்தக் கொதிப்பு என இன்றைய நோய் பாதிப்புகளுக்கு மிகச்சிறந்த நிவாரணமாக கீரைகள் உள்ளன.

கீரைகளில் உள்ள சத்துகள் இன்சுலின் அளவை சமநிலைக்குக் கொண்டு வருவதால் Type-2 நீரிழிவு பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது. தொடர்ந்து கீரைகள் சாப்பிட்டு வருவதன் மூலம் கல்லீரல் புற்றுநோய் வருவதை முற்றிலும் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கீரைகளும் அதனது பயன்களும் குறித்து தேசிய அறிவியல் கழகத்தின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு கல்லீரல் பிரச்னைகளுக்கான தீர்வாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை - பொன்.ராதாகிருஷ்ணன்
First published: December 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...