முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குளிர் சீசனில் அதிகம் கிடைக்கும் பச்சை தக்காளியை உணவில் சேர்ப்பது ஆரோக்கியமானதா..?

குளிர் சீசனில் அதிகம் கிடைக்கும் பச்சை தக்காளியை உணவில் சேர்ப்பது ஆரோக்கியமானதா..?

பச்சை தக்காளி

பச்சை தக்காளி

வழக்கமாக சிவப்பு நிறத்திலான தக்காளி ஆண்டின் அனைத்து சீசன்களிலும் கடைகளில் கிடைக்கும் நிலையில், பச்சை கலர் தக்காளியை பார்த்திருக்கிறீர்களா.!

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வழக்கமாக சிவப்பு நிறத்திலான தக்காளி ஆண்டின் அனைத்து சீசன்களிலும் கடைகளில் கிடைக்கும் நிலையில், பச்சை கலர் தக்காளியை பார்த்திருக்கிறீர்களா.! உள்ளூர் கடைகளில் இந்த பச்சை தக்காளி குறிப்பாக குளிர் சீசனில் பரவலாக கிடைக்கிறது.

இந்த சீசனல் தக்காளி பல சுவையான கறிகள், சட்னிகளை தயாரிக்க பயன்படும் சுவையான பிரதான உணவு பொருளாக இருக்கிறது. ஆனால் சிவப்பு தக்காளியை போலவே பச்சை தக்காளி ஆரோக்கியமானதா என்பது பலருக்கும் சந்தேகமாக இருக்கிறது. குளிர் சீசன் துவங்கி உள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் பச்சை தக்காளி விற்பனை அதிகரித்துள்ளது. நம் ஆரோக்கிய உணவின் ஒருபகுதியாக பச்சை தக்காளியை சேர்க்கலாமா.? கூடாதா.? நிபுணர்களின் கருத்தை இங்கே பார்க்கலாம்...

பிரபல நியூட்ரிஷியனான கரிமா கோயல் தனது இன்ஸ்டா போஸ்ட் ஒன்றில், பச்சை தக்காளியின் உறுதியான அமைப்பும், நிலைத்தன்மை காரணமாக மக்கள் இவற்றை சட்னி, ஊறுகாய், வறுத்த கறி மற்றும் சல்சா போன்ற பல உணவுகளில் பயன்படுத்துகின்றனர்.

மற்ற அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளை போல பச்சை தக்காளியும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸின் சிறந்த மூலம் என குறிப்பிட்டுள்ளார். அதே போல பிரபல ஃபுட் தெரப்பிஸ்டான டாக்டர் ரியா பானர்ஜி அன்கோலா சமீபத்தில் தனது இன்ஸ்டா போஸ்ட்டில் பச்சை தக்காளி சட்னிக்கான ரெசிப்பியை ஷேர் செய்துள்ளார். பச்சை தக்காளி மிகவும் சுவையானது மற்றும் வைட்டமின் சி நிறைந்தது எனவே டயட்டில் இதனை சேர்க்க தவறாதீர்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Ria Banerjee Ankola (@drriaankola)பச்சை தக்காளி சட்னி ரெசிபி : 

தேவையான பொருட்கள்: ஃபிரெஷ்ஷான பச்சை தக்காளி - 2, தேவையான அளவு - பூண்டு, கொத்துமல்லி தழை, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, ஹிமாலயன் பிங்க் சால்ட்

செய்முறை: எலுமிச்சை சாறு தவிர மீதி அனைத்து பொருட்களையும் ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும். சட்னி தயாரான பின் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

பச்சை தக்காளியை குளிர் சீசனில் ஏன் நம் டயட்டில் சேர்க்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்களை பிரபல டயட்டிஷியன் பிரியா பாலன் பட்டியலிட்டுள்ளார். இவரது கருத்துப்படி பச்சை தக்காளியின் முக்கிய நன்மைகள் கீழே:

நோய் எதிர்ப்பு சக்தி :

குளிர் சீசனில் நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பச்சை தக்காளியில் நிரம்பியுள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த, குளிர் மற்றும் பிற நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பைட்டோ கெமிக்கல்களின் சிறந்த ஆதாரமாக இருக்கும் பச்சை தக்காளி நோய்கள் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் சேதங்களுக்கு எதிராக போராட உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குடல் ஆரோக்கியம் :

பச்சை தக்காளியில் ஃபைபர் சத்து அதிகம் என்பதால் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. மலச்சிக்கல் பிரச்சனையை தடுப்பதோடு மட்டுமல்லாமல் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு அபாயங்களை குறைக்கின்றன. பச்சை தக்காளியின் விதைகள் மற்றும் தோலில் ஃபைபர் சத்து அதிகம் இருக்கிறது. இந்த டயட்ரி ஃபைபர்ஸ் குடலில் செரிக்கப்படுவதில்லை, ஆனால் நல்ல குடல் பாக்டீரியாக்கள் பெருக உதவுகின்றன.

பார்வை திறன்:

பச்சை தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் கண் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ-வை உற்பத்தி செய்ய உதவி பார்வை திறனை மேம்படுத்துகிறது.

குறைந்த ரத்த அழுத்தம் :

பச்சை தக்காளி பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக இருப்பதால் ரத்த அழுத்தத்தை வெகுவாக குறைக்க உதவுகிறது. பச்சை தக்காளி ரத்தக் குழாயில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் ஆக்ஸிடேஷனை தடுக்க உதவி இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

சரும ஆரோக்கியம் :

பச்சை தக்காளி ஆரோக்கியமான, பளபளப்பான மற்றும் இளமையாம சருமத்திற்கு உதவுகிறது. பச்சை தக்காளியில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி சரும செல்களை உருவாக்கி முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கிறது.

கேன்சர் எதிர்ப்பு :

ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிரம்பியுள்ள பச்சை தக்காளி வீக்கத்தை குறைக்க, நச்சுகளை எதிர்த்து போராட உதவுகின்றன. மேலும் இதில் உள்ள அதிக அளவு tomatine என்ற பயோஆக்டிவ் கலவை கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.

Also Read : காரசாரமான கர்நாடக சட்னி ரெசிபி... இட்லி, தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.!

உடலை ஹைட்ரேட்டாக வைக்கிறது:

பச்சை தக்காளியில் 94% தண்ணீர் இருப்பதால் உடலை ஹைட்ரேட்டாக வைத்து ஆரோக்கியமான பசி உணர்வை பராமரிக்கிறது.

First published:

Tags: Chutney, Food recipes, Tomato