இந்தியாவில் எந்த புதுமையும் தோற்றுப்போவதில்லை. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் ஜப்பானியர்களின் மாட்சா டீ. எங்கு திரும்பினாலும் இந்த மாட்சா டீ கண்களில் தென்படுகிறது.
மாட்சா டீ என்பது ஜப்பானியர்களின் பானமாகும். இது கிரீன் டீ இலைகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீ இலைகளை பொடியாக்கி அதை சுடுநீரில் கலந்துக் குடிப்பதுதான் இந்த மாட்சா டீ. இதை சூடாகவும் குடிக்கலாம். ஐஸ் கட்டிகள் போட்டு சில்லெனவும் குடிக்கலாம்.
கிரீன் டீ குடித்துக்கொண்டிருந்தோர் பலரும் தற்போது மாட்சா டீக்கு மாறியுள்ளனர். காரணம் பத்து கப் கிரீன் டீயில் இருக்கும் நன்மைகள் ஒரே கப் மாட்சா டீயில் இருக்கின்றனவாம்.
உடல் எடைக் குறைத்தலுக்கு மாட்சா டீ நல்ல பலனை அளிக்கிறது என்று பலரும் தங்கள் சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்து வருகின்றனர். இது உடலுக்கு உடனடி ஆற்றல் அளிப்பதோடு நாள் முழுவதும் அந்த ஆற்றலைத் தக்க வைக்கிறது. தேவையில்லாத கலோரிகளைக் கரைக்கிறது. உடல் நச்சுத்தன்மையை நீக்கி சுத்தம் செய்கிறது என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். புற்றுநோய் கிருமிகளோடு சண்டையிடும் ஆற்றலும் இதற்கு உண்டு என்கின்றனர்.
அதேபோல் சமீபத்தில் ஜப்பானின் குமமோடோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த மாட்சா டீயைக் குடித்தால் பதட்டம் விலகி மனம் ரிலாக்ஸாகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். டோபமைன் ஹார்மோனையும் தூண்டுவதால் மன மகிழ்ச்சி ஏற்பட்டு ’ஃபீல் குட்’ உணர்வை அளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த மாட்சா டீ பல வருடங்களாக உடல் நோய் தொற்றுகள், கிருமிகள், கடுமையான நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாட்சா டீ உடலுக்கு மட்டுமல்ல சரும அழகுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பல பியூட்டி பார்லர்களில் மாட்சா டீ ஃபேஷியல் டிரெண்டாகி வருகிறது. இது சருமத்தின் அழுக்குகளை வேர் வரை சென்று நீக்கி பளபளப்பை அளிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாட்சா டீ பவுடரை வீட்டிலும் பேக் போல் முகத்தில் அப்ளை செய்து அழகைப் பராமரிக்கின்றனர்.
இந்த மாட்சா டீ ஃப்ளேவரில் ஐஸ்கிரீம், கேக், சாக்லெட் என வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் இந்த புதிய மாட்சா ஃப்ளேவர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.