• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பச்சை மிளகாய் பச்சடி செய்ய ரெசிபி!

பச்சை மிளகாய் பச்சடி செய்ய ரெசிபி!

பச்சை மிளகாய் பச்சடி

பச்சை மிளகாய் பச்சடி

பச்சை மிளகாயில் வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதனால் நம் உடலின் பாதுகாவலனாக அது உதவுகிறது. இயக்க உறுப்புகளின் பாதிப்பிலிருந்து நம் உடலை காக்கிறது பச்சை மிளகாய். மேலும் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோயிலிருந்து காக்கும்.

  • Share this:
நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும்கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் ஏ சத்தானது அதிகம். அதனால், விழித் திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது. அத்தகைய பச்சை மிளகாயில் இந்த ரெசிபியை செய்து சாப்பிட்டு பாருங்கள்...

தேவையான பொருள்கள்

பச்சைமிளகாய் - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

புளி - எலுமிச்சை அளவு

வெல்லம் (பொடித்தது) - 4 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க

தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி

தாளிக்க 

எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி

கடுகு - 1 மேஜைக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 1/2 மேஜைக்கரண்டி

பச்சையாக சாப்பிடுவது முதல், வறுத்து, பொறித்து, தாளித்து சாப்பிடுவது வரை, பச்சை மிளகாயை பல்வேறு விதமாக சமைக்க பயன்படுத்தலாம். காரத்துக்கு மட்டுமின்றி, மணம் சேர்க்கவும், பயன்படுத்தப்படும் பச்சை மிளகாய், வைட்டமின்கள் நிறைந்தது. அது மட்டுமின்றி, பல்வேறு நன்மைகளை அளிக்கின்றது.


செய்முறை 

பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். இரண்டும் சம அளவாக எடுத்துக் கொள்ளவும். புளியை 100 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை மிக்ஸ்சியில் அரைத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர், மல்லிப்பொடி, மஞ்சள்தூள், வெல்லத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து பச்சடி கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். காரம் அதிகமாக இருந்தால் கூடுதலாக வெல்லத்தூள் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான மிளகாய் பச்சடி ரெடி. பச்சை மிளகாய் பச்சடியை பிரிஜ்ஜில் வைத்து சில நாட்கள் வரை கெடாமல் உபயோகிக்கலாம் இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்..

மேலும் படிக்க... ஈசியான தேங்காய் சாதம் செய்வது எப்படி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: