வீட்டில் தயிர் அதிகமா இருக்கா? தயிர் வச்சு வித்தியாசமான ரெசிபிய செஞ்சு அசத்துங்க!

தயிர்

வீட்டில் மீந்து போகும் தயிரை என்ன செய்வது என்று எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கிறோம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் உள்ள அனைத்து சமயலறைகளிலும் தயிர் ஒரு அவசியமான பால் பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களில் சாப்பாட்டுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது போல வட மாநிலங்களில் ரொட்டிகளுக்கு தயிர் வைத்து சாப்பிடுவர். இவ்வாறு தயிர் அனைத்து வீடுகளிலும் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. ஆனால், வீட்டில் மீந்து போகும் தயிரை என்ன செய்வது என்று எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கிறோம். பெரும்பாலும் மீந்துபோகும் தயிர் அப்படியே விடப்பட்டு பின்னர் அது குப்பையில் சேர்க்கிறது. ஆனால் இனி அப்படி செய்ய வேண்டாம். வீட்டில் மீதமாகும் தயிர் வைத்து சில அட்டகாசமான உணவு வகைகளை தயார் செய்து அசத்துங்க.

1. தயிர் டிப்:

வீட்டில் மீந்துபோன தயிர் வைத்து ஒரு சிறந்த சுவை மிகுந்த டிப்பை நீங்கள் தயார் செய்யலாம்.

* முதலில் ஒரு மஸ்லின் துணியில் தயிர் ஊற்றி அதில் இருக்கும் தண்ணீர் முழுவதும் வடியும் வரை இறுக்கமாக கட்டி தொங்கவிட வேண்டும்.

* சில மணிநேரங்கள் கழித்து தயிரை துணியில் இருந்து எடுத்து ஒரு கிணத்திற்கு மாற்றி கிளறவும்.

* அதில் உங்கள் சுவைக்கு ஏற்ப ஒரகெனோ சீசனிங் மற்றும் சில்லி பிளேக்ஸ் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கலக்கவும்.

* பின்னர் அதில் சிறிது கருப்பு மிளகுதூள் தூவி மீண்டும் கலக்கவும். இறுதியாக சிறிது துருவிய சீஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* உங்களுக்கு பிடிக்குமானால் நறுக்கிய வெங்காயம் மற்றும் வேகவைத்த சோளங்களை கலவையில் சேர்த்துக்கொள்ளலாம்.

* அவ்வளவுதான் கர்ட் டிப் ரெடி. இந்த டிப்பை ஃப்ரைஸ், பஜ்ஜி அல்லது சிப்ஸுடன் சேர்த்து சாப்பிடலாம்.

2. தயிர், ரவை இட்லி:

தேவையான பொருட்கள்:

ரவை - 3 கப்
மீந்துபோன தயிர் - 1 கப்
கடுகு விதைகள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பேக்கிங் - 1 தேக்கரண்டி
காய்த்த மிளகாய் - 2
மிளகுத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பிறகு அதில் கடுகு சேர்த்து பொரிந்த உடன் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.

* அடுத்ததாக ரவையை சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து ரவையை குளிர வைக்க வேண்டும்.

* ரவை கலவை குளிர்ந்தவுடன் மீதமுள்ள தயிரைச் சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

* அடுத்து சிறிதளவு பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

* இட்லி தட்டில் இந்த கலவையை ஊற்றி வேகவைத்து, சாம்பார் அல்லது சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.

Also read... ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..!

3. மோர் குழம்பு:

தேவையான பொருட்கள்:

தயிர் - 1 கப்
தேங்காய் - சிறிதளவு
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், தனியா, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* பின் மிதமான தீயில் அதனை 3 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறினால், சிம்பிளான மோர் குழம்பு தயார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: