ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஒரு வாரத்தில் 5 முதல் 8 கிலோ வரை குறைக்க உதவும் GM டயட்..!

ஒரு வாரத்தில் 5 முதல் 8 கிலோ வரை குறைக்க உதவும் GM டயட்..!

GM Diet

GM Diet

கீழே கொடுக்கப்பட்டுள்ள  GM டயட் அட்டவணையில் ஏழு நாட்களுக்கும் என்னென்ன சாப்பிட வேண்டும் என்பது தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அதை அப்படியே பின்பற்றுகையில் ஒரு வாரத்தில் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.!

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

GM (General Motors) டயட் என்பது ஒரு வாரத்திற்கான உணவு அட்டவணையைக் கொண்ட கண்டிப்பான டயட் சார்ட் ஆகும். இந்த டயட் பிளானை முதன்முதலில் 1985-ல் ஜென்ரல் மோடார்ஸ் (General Motors) என்ற நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறையுடன் சேர்ந்து உருவாக்கிய டயட் பிளான் ஆகும். 

இந்த டயட்டை வடிவமைப்பதன் முக்கிய நோக்கம் தங்களிடம் வேலை பார்க்கும் பணியாளர்கள் தங்களின் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்குமாகும்.

தொழிலாளிகள் ஃபிட்டாக இருப்பதனால் வேலையை சுறுசுறுப்பாக செய்வதற்கு செயல் திரனை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இந்த டயட்டை அவர்கள் நடைமுறைப்படுத்தி பார்த்தபோது பணியாளர்கள் ஒரு வாரத்தில் செய்து முடிக்கும் போது பெரும்பாலானோரின் உடல் எடை கிட்டத்தட்ட 5- ல் இருந்து 8 கிலோ வரை குறைந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் ஆற்றல் அதிகரித்திருந்தது. அதன்பின்னர் இந்த டயட் (General Motors) GM டயட் என்ற பெயரிலேயே உலகளவில் பிரபலமானது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள  GM டயட் அட்டவணையில் ஏழு நாட்களுக்கும் என்னென்ன சாப்பிட வேண்டும் என்பது தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அதை அப்படியே ஒரு வாரத்திற்கு பின்பற்றுகையில் உடல் எடை  ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.!

நாள் 1 : இந்த நாளில் வெறும் பழங்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டும். வாழைப்பழத்தைத் தவிர அனைத்து விதமான பழங்களையும் சாப்பிடலாம். குறிப்பாக நீர்ச்சத்து அதிகமுள்ள தர்பூசணி மற்றும் முலாம் பழத்தை அதிகம் எடுத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

நாள் 2 : ஒரு பெரிய வேகவைத்த உருளைக்கிழங்கைக் காலை உணவாக எடுக்க வேண்டும். மேலும் இந்நாளில் வெறும் காய்கறிகளை மட்டுமே சாப்பிட வேண்டும். பச்சையாகவோ வேகவைத்தோ சாப்பிடலாம்.

நாள் 3 : இந்நாளில் வாழப்பழத்தையும் உருளைக்கிழங்கையும் தவிர்த்து அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழங்களை வேகவைத்தோ பச்சையாகவோ சாப்பிடலாம்.

நாள் 4 : 3-ல் இருந்து 4 கிளாஸ் கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் 8 - 10 வாழைப்பழத்தை மட்டும் காலை, மதியம் மற்றும் இரவு உணவிற்குப் பிரித்துப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாள் 5 : 500 கிராம் தோலில்லாத சிக்கன் அல்லது கிரில் செய்த மீன் எண்ணெய் இல்லாமல் சமைத்ததை எடுத்துக் கொள்ளலாம். மேலும் 6 தக்காளி சாப்பிட வேண்டும். தக்காளி சாப்பிட புடிக்காதவர்கள்  சூப்பாக வைத்துப் பருகலாம்.

Also Read : கொழுப்பை வேகமாக கரைக்கக் கூடிய பச்சை நிற உணவுகள் இவை.!

நாள் 6 : 500 கிராம் தோலில்லாத சிக்கன் அல்லது கிரில் செய்த மீன் எண்ணெய் இல்லாமல் சமைத்ததை எடுத்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடாதவர்கள் 2 கப் பிரவுன் ரைஸ் எடுத்துக் கொள்ளலாம். மேலும் எல்லா வகை காய்கறிகள் உருளைக்கிழங்கை தவிர எடுத்துக் கொள்ளலாம்.

நாள் 7 : ஒரு கப் சாதம் அத்தோடு எல்லா வகை காய்கறிகள் உருளைக்கிழங்கை தவிர வேகவைத்தோ பச்சையாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

இந்த டயட் செய்பவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் : 

- டயட் செய்யும் பொழுது பசித்தால் அவ்வப்போது  முட்டைகோஸ்  சூப் செய்து சாப்பிடலாம்.

- தினமும் 10-இல் இருந்து 12 கிளாஸ் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.

- மது குடிப்பது, புகைப்பழக்கம், டீ, காபி என அனைத்தையும் இந்த டயட் செய்து முடிக்கும் வரை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் கிரீன் டீ, பிளாக் டீ அல்லது பிளாக் காஃபியை சர்க்கரை இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

- டயட் செய்து முடிக்கும் வரை அதிகளவில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி செய்ய விரும்பினால் 15 நிமிடம் நடைப்பயிற்சி மேற்க்கொள்ளலாம்.

- டயட் செய்து முடித்தபின் குறைந்த இடைவேளை விட்டு மறுபடியும் இந்த டயட்டை தொடர்ச்சியாக இருப்பது உடலின்  ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குறைந்தது 2 அல்லது 3 வாரங்கள் இடைவேளை இருப்பது அவசியம்.

- டயட்டை ஒரு வாரத்திற்கு செய்து முடித்தபின் அதிக புரதம் குறைந்த மாவுச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குறைத்த உடல் எடையை அப்படியே பராமரிக்க உதவியாக இருக்கும்.

Also Read : 2.5 மாதங்களில் 15 கிலோ எடைக்குறைத்த இளம் பெண்… எப்படின்னு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

இந்த டயட் செய்வதனால் ஏற்படும் பக்க விளைவுகள் :

- இந்த டயட் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும் இதற்கு ஒரு சில பக்க விளைவுகள் இருப்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

- முதலில் இந்த டயட் நீண்ட கால எடை இழப்பு இலக்குக்கு ஏதுவானது அல்ல. காரணம் எந்த டயட் இருந்தாலும் முதலில் நாம் உடலில் உள்ள நச்சு நீர் வெளியேறும் அதனால் எடை வெகுவாக குறையும். அதன் பின்னர் எடை இழப்பிற்காக ஒன்றுமே செய்யாத பட்சத்தில் இழந்த எடை மீண்டும் ஏறும் வாய்ப்பு அதிகம்.

- மேலும் வைட்டமின் பி12, கேல்ஷியம், அயன் போன்ற சத்துக்கள் கிடைக்கப்படாமல் போய்விடும்.

- குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவதனால் தசை இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாது மெட்டபாலிஸத்தின் வேகத்தை குறைத்து எதிர்காலத்தில் எடை இழக்க கடினமாக்கலாம்.

- பிடித்த உணவு சாப்பிட முடியாத காரணத்தினால் எரிச்சல் மற்றும் அடிக்கடி மனநிலை மாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.

- மேலும் குறைந்த கலோரி நிறைந்த உணவை உட்கொள்வதனால் சோர்வாக மற்றும் பலவீனமாக உணர்வதற்கான நிரைய வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பு : உடல் எடையைக் குறைக்க எந்த முயற்சி செய்தாலும் மருத்துவர்களிடம்  நம் உடல்வாகிற்கும் உடல் நலனிற்கும் ஏற்றதா என்பதை ஆலோனைப் பெற்ற பின் செய்வதே பாதுகாப்பு.

First published:

Tags: Diet Plan, Diet tips, Weight loss