முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / செரிமானத்திற்கு ஏற்ற இஞ்சி குழம்பு... இதோ ரெசிபி

செரிமானத்திற்கு ஏற்ற இஞ்சி குழம்பு... இதோ ரெசிபி

இஞ்சி குழம்பு

இஞ்சி குழம்பு

Ginger Kuzhambu Recipe |  இஞ்சி உணவின் கூடுதல் சுவைக்காக மட்டுமின்றி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இஞ்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது. அத்தகைய இஞ்சியை குழம்பு வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 2 ஸ்பூன்

கடலை பருப்பு - 2 ஸ்பூன்

சாம்பார் பொடி - 2 ஸ்பூன்

வெங்காயம் - 3

புளி - சிறிதளவு

பூண்டு - 20 பல்

இஞ்சி - 25 கிராம்

வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும்.

2. கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.

3. நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். அடுத்து 1 டம்ளர் தண்ணீர், புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவும்.

4. நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார். இந்த இஞ்சி குழம்பு வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.

5. உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த இஞ்சி குழம்பை சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். வயிற்றில் உள்ள அத்தனை பிரச்சினைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். மிஸ் பண்ணாம உங்க வீட்டில் வாரத்துக்கு ஒருமுறை இந்த குழம்பு வச்சு சாப்பிடலாம்.

First published:

Tags: Ginger