Home /News /lifestyle /

கரம் மசாலா பொடி செய்ய ரெசிபி...

கரம் மசாலா பொடி செய்ய ரெசிபி...

கரமசாலா

கரமசாலா

கரம் மசாலா தூளானது பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாக இருக்கிறது. இதனால் இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படும் முக்கியமான பொடியாகும்..

கரம் மசாலா பொடி என்பது இந்திய உணவில் சேர்க்கப்படும் அன்றாட இந்திய மசாலா கலவையாகும்.

தேவையான பொருள்கள் 

பெருஞ்சீரகம் (சோம்பு) - 100 கிராம்

பட்டை - 10 கிராம்

கிராம்பு - 10 கிராம்

அன்னாசிப்பூ - 10 கிராம்

ஏலக்காய் - 10 கிராம்

செய்முறை 

1. எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும்.

2. அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.

Also See... சுவையான பலாக்காய் குழம்பு செய்ய ரெசிபி...

3. நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் அரைக்கவும்.

4. பிறகு பேப்பரில் பரப்பி வைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். கரம் மசாலா பொடியை பிரியாணி, குருமா வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Garam Masala

அடுத்த செய்தி