பழங்கள் சாப்பிடுவது உங்கள் உடலுக்கான ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யும் போது உங்களின் இனிப்பு தாகத்தையும் சமாளிக்க மிகவும் திருப்திகரமான வழிகளில் ஒன்றாகும். நீரிழிவு நோயில் பழ நுகர்வு குறித்து பல ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் இருந்தபோதிலும், சரியான வகையான பழ நுகர்வு மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளுடன் அதன் தொடர்பு குறித்து நிறைய வியூகங்கள் உள்ளன.
மேலும், கீழே பட்டியலிடப்பட்டுள்ள பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் உகந்தவை அல்ல, ஆனால் இன்றைய சூழலுக்கு நல்ல உடல்நலனை பெற எல்லோரும் சாப்பிட வேண்டிய தேவை உள்ளது. பழங்கள் நார் மற்றும் நீர் உள்ளடக்கம் நிறைந்தவை. இது உடலில் சர்க்கரை உறிஞ்சுதல் விகிதத்தை குறைக்கும். சரி, நீரிழிவு நோயாளிகள் தவிர்க்காமல் சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து பார்க்கலாம்.
ஆப்பிள்: சத்தான மற்றும் பசி தாங்கும் பழம் மட்டுமல்ல; ஒரு ஆய்வின்படி, அவை அளவாக உட்கொள்வது நம்மை டைப் 2 நீரிழிவு நோய் தாக்குதலில் இருந்து காக்கும் என தெரியவந்துள்ளது. ‘ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவது மருத்துவரை விலக்கி வைக்கும்’ என்ற பழைய கூற்றில் ஒரு உண்மை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
அவகடோ: அவகடோ பழங்கள் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை மட்டுமல்ல, அவை 20க்கும் மேற்பட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரமாகும். அவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளதால், அவை நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்.
Must Read | அவகடோ பழம் உடல் எடையை குறைக்க உதவுமா? ஆய்வு சொல்வது என்ன?
பப்பாளி: இப்பழம் இயற்கையான ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான தேர்வாக அமைகிறது. இது எதிர்காலத்தில் உடலில் உள்ள செல்கள் சேதத்திற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
தர்பூசணி (முலாம்பழம்): நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோய் வளரும் அபாயமுள்ளவர்களுக்கும் சக்திவாய்ந்த நீரேற்ற பழமாக தர்பூசணி பரிந்துரைக்கப்படுகிறது. நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி மற்றும் சி போன்ற பல ஊட்டச்சத்து நன்மைகளுக்காக மிதமான அளவில் சாப்பிடுங்கள்.
ஆரஞ்சு: இந்த சிட்ரஸ் பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுதலை குறைக்க உதவுகிறது. மேலும், அதன் வைட்டமின் சி கூறு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diabetics, Fruits, Healthy Life, Type 2 diabetic