Home /News /lifestyle /

கார பணியாரம், ஸ்வீட் பணியாரம் சாப்புட்டிரூப்பீங்க.... ஃப்ரூட் பணியாரம் சாப்புட்டிரூக்கீங்களா?

கார பணியாரம், ஸ்வீட் பணியாரம் சாப்புட்டிரூப்பீங்க.... ஃப்ரூட் பணியாரம் சாப்புட்டிரூக்கீங்களா?

இப்படி ஃப்ரூட் பணியாரம் செய்து கொடுத்தால் குழந்தைகள் காலை உணவை தவிர்க்காமல் விரும்பி சாப்பிடுவார்கள்.

    பணியாரம் குழந்தைகள முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான மாலை நேர ஸ்நாக்ஸ். இதில் பழங்கள் போட்டு பணியாரமாக செய்தால் எப்படி இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - அரை கிலோ

    வாழைப்பழம் - 2 (பெரியது)

    முட்டை -3

    ஸ்ட்ராபெரி - 1 கப்

    தேன் - தேவையான அளவு

    சப்போட்டா - 1 கப்

    மாதுளம் பழம் - 1 கப்

    ஆப்பிள் - 1 கப்

    சர்க்கரை - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் கோதுமை மாவில் தேவையான அளவு நீரை ஊற்றி கரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர், வாழைப்பழம் மற்றும் முட்டையை சேர்த்து பிசைந்து, கரைத்து வைத்துள்ள கோதுமை மாவில் சேர்க்க வேண்டும். அடுத்ததாக தேவையான அளவு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக கரைத்து, ஊற வைக்க வேண்டும்.

    பின்னர்,மாவை பணியாரக் குழிக்குள் ஊற்றுவதற்கு முன்பாக ஏற்கனவே தயார் நிலையில் உள்ள ஆப்பிள், மாதுளை மற்றும் சப்போட்டாவை நறுக்கி தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். மாவுடன் சேர்த்து பிசந்து கெள்ள வேண்டும்.

    இதன் பின்னர், பணியாரக்குழிக்குள் மாவை ஊற்றி பொன்னிறமாக வேகவைத்து எடுத்து தட்டில் போடவும். இப்போடு ஃபருட் பணியாரம் ரெடி. இதனை சாப்பிடக் கொடுக்கும் முன்பு தட்டில் கொஞ்சம் தேன் ஊற்றி பரிமாறுவது நல்லது. இந்த பணியாரத்தை தேனில் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இது, பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். விருந்தினருக்கு சூப்பரான ரெசிபி.

    மேலும் படிக்க... முட்டை பணியாரம் செய்வது எப்படி?
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Evening Snacks

    அடுத்த செய்தி