ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்களில் உண்மையிலேயே ஊட்டச்சத்து நிறைந்துள்ளதா?

நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்களில் உண்மையிலேயே ஊட்டச்சத்து நிறைந்துள்ளதா?

காய்கறிகள், பழங்கள்

காய்கறிகள், பழங்கள்

ஊட்டச்சத்தின் ஆதாரமாக இருக்கும் இந்த உணவுகளிலேயே சத்தின் அளவும் மதிப்பும் தற்போது குறைந்துள்ளதால் பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

காய்கறிகள் மற்றும் பழங்களில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற, அதிக அளவில் பழங்களை மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். தினமும் ஒரு கீரையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் கூறுவார்கள். இது உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ஒவ்வொரு காலத்திற்கும், பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு காய்கறிகள் மற்றும் பழங்கள் ஒவ்வொரு இடத்திலும் அதிகமாக விளையும். சீசனல் ஹார்வெஸ்ட் என்று கூறப்படும் பருவ நிலைக்கேற்ப நீங்கள் வசிக்கும் இடத்தில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆனால், காய்கள் பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்புகள் குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறது. உதாரணமாக வாழைப்பழம், மாம்பழம் உள்ளிட்டவை கற்கள் அல்லது கெமிக்கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறது என்ற செய்தியை நீங்கள் பலரும் அறிந்திருப்பீர்கள். அதேபோல காய்கறிகள் விளையும் பொழுது புழு வரக்கூடாது என்பதற்காக கெமிக்கல் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் நீங்கள் பல செய்திகளில் கண்டிருப்பீர்கள். இந்த நிலையில், பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றனவா?

ஊட்டச்சத்தின் ஆதாரமாக இருக்கும் இந்த உணவுகளிலேயே சத்தின் அளவும் மதிப்பும் தற்போது குறைந்துள்ளதால் பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நேஷனல் ஜியாக்ராஃபிக் அறிக்கையின்படி பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் மதிப்பு மற்றும் சத்துகளின் அளவு குறைவதற்கு மண் வளத்தில் இருக்கும் தரம் குறைந்துள்ளது தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மண் வளத்தின் தரம் பல்வேறு காரணங்களால் குறைந்துள்ளது. உதாரணமாக உரங்கள் பயன்படுத்துவது, மண் எடுப்பது, ரசாயனங்கள் பயன்படுத்துவது, இன்டஸ்ட்ரி கழிவுகள் மண்ணில் கலப்பது ஆகியவற்றைக் கூறலாம்.

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் வரும் ஆபத்துகள்..!

அதுமட்டுமின்றி, இயற்கையாகவே செய்யப்படும் விவசாய முறைகள் மாறி அதற்கு பதிலாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் அதுவும் மண் வளத்தை பாதித்துள்ளது. பருவநிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல், எதிர்பாராத நேரத்தில் வெள்ளம், மழை மற்றும் புயல் ஆகியவை அதிகரித்து அதிகரித்துள்ளன. இத்தகைய காரணங்களால் மண்ணின் வளம் மற்றும் ஊட்டச்சத்து மிக்க பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவதற்கு தேவையான மண்ணின் தரம் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மண்ணின் ஈரப்பதமும் கணிசமாக குறைந்துள்ளதால் ஊட்டச்சத்து என்பதே கேள்விக்குறியாகி விட்டது.

இது எவ்வளவு ஆபத்தானது?

அமெரிக்கா சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியரான டேவிட் ஆர். மாண்ட்கோமெரி, நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தியை பாதிக்கும், குறைவான ஊட்டச்சத்து வேல்யூவைக் கொண்ட மிகவும் முக்கிய ஆபத்துகளில் முக்கியமானதை வலியுறுத்தினார். "ஊட்டச்சத்து குறைந்து கொண்டே வருவதால், கிரானிக் நோய்கள் என்று கூறப்படும் நாள்பட்ட நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கத் தேவையான கூறுகள் நம் உடலை விட்டு வெளியேறுகிறது - இது தடுப்பு மருந்தாக செயல்படும் உணவின் முக்கியத்துவத்தை, மதிப்பைக் குறைக்கப் போகிறது" என்று கூறினார்.

பல்வேறு நோய்கள் மற்றும் குறைப்பாடுகள் உருவாகி வரும் நிலையில், பலருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அடிப்படையிலான உணவுகளை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வீகன் உணவு பழக்கமுறையும் தற்போது ட்ரெண்டாகி வருகின்றது. எனவே எதிர்காலத்தில் உலக மக்கள் தொகையில் கணிசமான எண்ணிக்கை தாவர உணவுகளையே நம்பி இருப்பதால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆபத்து அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Fruits, Vegetables