• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இந்த பழங்கள், காய்கறிகளை தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது - மருத்துவர் கூறும் விளக்கம்!

இந்த பழங்கள், காய்கறிகளை தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது - மருத்துவர் கூறும் விளக்கம்!

ஆப்பிள் தோல்

ஆப்பிள் தோல்

பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை நாம் அடிக்கடி நிராகரிக்கிறோம். ஆனால் வெளியில் இருந்து பழங்களை வாங்கி வந்த பிறகு லேசான சோப்புடன் அதனை சுத்தம் செய்யுங்கள். ஏனெனில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள தோல் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.

  • Share this:
நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் போதுமான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்ல பலன்களை தரும். தொற்றுநோய்க்கு மத்தியில், உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அகியவற்றை பலப்படுத்துவதில், சத்தான உணவுகளுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தற்போது உணர்ந்து வருகின்றனர்.

இருப்பினும், பழங்கள் மற்றும் காய்கறிகளை தோலுடன் சாப்பிட வேண்டுமா அல்லது தோல் இல்லாமல் உட்கொள்ள வேண்டுமா என்பது குறித்து மக்களிடையே எப்போதும் விவாதமும் குழப்பமும் நிலவி வருகிறது. இந்த குழப்பமான கேள்விக்கு உணவு, வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கிய நிபுணர் டாக்டர் சித்தாந்த் பார்கவா என்பரிடம் பதில் உள்ளது. காய்கறி மற்றும் பழங்களில் தோலுடன் உண்ணக்கூடியவற்றை அப்படியே சாப்பிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்தாவது," தோலுடன் சாப்பிடக்கூடிய பழங்கள் மற்றும் நார்சத்து உள்ள உட்கொள்ளக்கூடிய பழங்களை எப்போதும் எடுத்துக்கொள்ளுங்கள். " என்று கூறியுள்ளார்.




அந்த வீடியோவில் டாக்டர் பார்கவா மேலும் தெரிவித்ததாவது, " சுகாதார அக்கறை காரணமாக பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை நாம் அடிக்கடி நிராகரிக்கிறோம். ஆனால் வெளியில் இருந்து பழங்களை வாங்கி வந்த பிறகு லேசான சோப்புடன் அதனை சுத்தம் செய்யுங்கள். ஏனெனில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள தோல் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.

பழத்தின் தோலில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. ஒரு பழத்தின் ஊட்டச்சத்து நன்மைகளில் 25-30 சதவீதம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதன் தோலில் உள்ளன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பீச்சஸ், பேரிக்காய், பிளம்ஸ், திராட்சை, ஆப்பிள், கொய்யாபழம் மற்றும் ஆரஞ்சுச்சுழை ஆகியவை தோல் நீக்கப்படாமல் சாப்பிடவேண்டிய பழங்கள் என்று கூறினார்.

தொப்பையை குறைக்க உதவும் சுரைக்காய் ஜூஸ் : தினமும் காலை குடித்து வந்தால் சிக்ஸ் பேக் கூட வைக்கலாம்..!

இதுதொடர்பாக ஹெல்த்லைன் வெளியிட்ட தகவலின்படி, பழங்களை தோலுடன் சாப்பிடுவதன் மூலம் உங்கள் பசியைக் குறைக்க முடியும். தொழில் நார்சத்து நிரம்பியிருப்பதால் உங்கள் வயிறு முழுமையானதாக உணரக்கூடும் என்பதை பல ஆய்வுகள் எடுத்துக் காட்டுகிறது. இது குறித்து மருத்துவர் மேலும் தெரிவித்ததாவது, "ஃபைபர் வயிற்றை உடல் ரீதியாக நீட்டிக்க செய்கிறது.

உங்கள் வயிற்றை முழுமையானதாக உணர வைக்கிறது. அதேபோல உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்கள் வெளியாகும் வேகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறியுள்ளார். இதனால், தோல் நீக்கப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் தினசரி ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் செய்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: