ஃபிரக்டோஸ் கொண்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையுமா? ஆய்வின் விளக்கம்..

ஃபிரக்டோஸ் கொண்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையுமா?  ஆய்வின் விளக்கம்..

மாதிரி படம்

பிரக்டோஸ் அல்லது பழ சர்க்கரை என்பது பல தாவரங்களில் காணப்படும் ஒரு எளிய கெட்டோனிக் மோனோசாக்கரைடு ஆகும்.

  • Share this:
ஃபிரக்டோஸ் அல்லது பழ சர்க்கரை என்பது பல தாவரங்களில் காணப்படும் ஒரு எளிய கெட்டோனிக் மோனோசாக்கரைடு ஆகும், இது பெரும்பாலும் குளுக்கோஸுடன் பிணைக்கப்பட்டு டிசாக்கரைடு சுக்ரோஸை உருவாக்குகிறது. ஃபிரக்டோஸ் மனிதர்களுக்கு அவசியம் என்றாலும் அதனால் சிக்கல்களும் ஏற்படுகிறது. ஃபிரக்டோஸ் அதிகம் உள்ள உணவை உட்கொள்வது நோயெதிர்ப்பு மண்டலங்களின் செயல்பாட்டைத் தடுக்கக்கூடும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகம் (University of Bristol) மற்றும் லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட் (The Francis Crick Institute) விஞ்ஞானிகளுடன் இணைந்து ஸ்வான்சீ விஞ்ஞானிகள் தலைமையிலான இந்த ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்டது. ஃபிரக்டோஸ் ஆனது பொதுவாக சர்க்கரை பானங்கள், இனிப்பு வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படுகிறது. மேலும் உணவு உற்பத்தியிலும் இவை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃபிரக்டோஸால் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்.ஃபிரக்டோஸ் உட்கொள்ளல் சமீபத்திய ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளில் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. இருப்பினும், ஃபிரக்டோஸை அதிக அளவில் உட்கொள்ளும் மக்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் விளைவு பற்றிய புரிதல் இப்போது வரை மக்கள் மத்தியில் இல்லை. புதிய ஆய்வு, பிரக்டோஸ் ஆனது நோயெதிர்ப்பு மண்டலத்தில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது, மேலும் இந்த செயல்முறை வீக்கத்துடன் இணைக்கப்பட்ட எதிர்வினை மூலக்கூறுகளையும் உருவாக்குகிறது.

இரும்புச்சத்து நிறைந்த ராகி.. குழந்தைகளுக்கு சமைத்துக்கொடுக்க 8 வகையான ஸ்பெஷல் ரெசிப்பிகள்..

இந்த வகை அழற்சி தொடர்ந்து செல்கள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும், உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புகள் செயல்படாமல் இருப்பதற்கும் கூட காரணமாக இருக்கலாம். ஃபிரக்டோஸ் நீரிழிவு மற்றும் உடல் பருமனுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதற்கான ஆழமான புரிதலையும் இந்த ஆராய்ச்சி நமக்கு வழங்குகிறது. ஏனெனில் குறைந்த அளவிலான உடல் வீக்கம் பெரும்பாலும் உடல் பருமனுடன் சேர்த்தே பார்க்கப்படுகிறது. ஸ்வான்சீ யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினின் டாக்டர் நிக் ஜோன்ஸ் “நம் உணவின் பல்வேறு கூறுகளை ஆராய்வது உடல் வீக்கம் மற்றும் நோய் ஏற்படுவதற்கான காரணம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு என்ன செய்வது போன்றவற்றை புரிந்துகொள்ள உதவும்” என்று கூறினார்.“எங்கள் ஆய்வு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகின்றது, ஏனென்றால் சில உணவுகள் ஏன் உடல்நலக்குறைவை ஏற்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு அவை எங்களுக்கு உதவுகிறது” என்று பிரிஸ்டல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் டாக்டர் எம்மா வின்சென்ட் கூறினார். உணவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்ற சொல்லிற்கேற்ப, நன்மை தரும் என்று நாம் நினைத்து சாப்பிடும் உணவுகள் நமக்கு சில சிக்கல்களை தருகின்றது. எனவே உங்கள் உடலை நீங்கள் தான் பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்துகொள்வது மிகவும் முக்கியம்.
Published by:Sivaranjani E
First published: