மோருடன் பெருங்காயத்தை கலந்து சாப்பிட்டிருப்போம், ஆனால் ஒருநாள் கூட பாலுடன் பெருங்காயத்தை கலந்து குடித்திருக்க மாட்டோம். ஏன் இப்படியொரு காம்பினேஷனை யோசித்துக்கூட பார்த்திருக்க மாட்டோம்.
ஆனால் பாலில் பெருங்காயத்தை கலந்து குடிப்பது வயிற்று பிரச்சனைகள் மற்றும் குடல் சார்ந்த செரிமான இயக்கத்தை சீராக்க உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய சமையலைப் பொறுத்தவரை பெருங்காயம் வாசனைக்காக மட்டுமல்ல வாயுத் தொந்தரவு, செரிமானப் பிரச்சனைகளை சரி செய்யும் மருந்தாகவே பயன்படுத்தப்படுகிறது. மேலும் கர்ப்பபை பிரச்சனைகள், மாதவிடாய் சிக்கல்கள், பாலுணர்வை தூண்டுதல் போன்ற விஷயங்களுக்கும் பெருங்காயம் அருமருந்தாக உள்ளது.
பெருங்காயத்தில் உள்ள பொருட்கள் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) நோயை குணமாக்க உதவக்கூடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் போன்ற குறிப்பிட்ட கொழுப்புகளின் உயர் ரத்த அளவுகளுக்கு எதிராக செயல்பட்டு, உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. பெருங்காயத்தில் உள்ள கூமரின் என்ற வேதிப்பொருள் ரத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து, அதனை மெல்லியதாக மாற்ற உதவுகிறது.
பாலுடன் பெருங்காயத்தை ஏன் சேர்க்க வேண்டும்?
ஒரு கிளாஸ் பாலுடன் 50 முதல் 70 மில்லி கிராம் பெருங்காயத்தூளை தொடர்ந்து எடுத்து வந்தால், வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளான புழுக்களை அழிக்கிறது. இதனால் வயிற்றில் ஏற்படும் ஏராளமான நொந்தரவுகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. திரவியகுண விஞ்ஞானம், பாவபிரகாஷ் நிகண்டு, வனூஷாதி சந்திரோதயா, நிகந்த் ஆதர்ஷ் போன்ற நூல்களின் படி, பாலுடன் பெருங்காயத்தை கலந்து குடிப்பது வயிற்றுவலி, அமிலத்தன்மை, உணவு அஜீரணம், செரிமான அமைப்பு செயலிழப்பு, புளிப்பு ஏப்பம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலுடன் பெருங்காயத்தை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
குடல் வறட்சியை நீக்கும்.
அஜீரணம், வாயுத்தொல்லை, வயிற்று வலி, வாந்தி, விக்கல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் வழங்கும்.
பெருங்காயம் சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டும், மலம் கட்டுதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றில் வீக்கம் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
செரிமானத்திற்கான குடல் இயக்கத்தையும் தூண்டுகிறது
கல்லீரல் செயல்பாட்டை தூண்டி உடலை இலகுவாகவும் சுறுசுறுப்பாகவும் மாற்றுகிறது
பெருங்காயத்தை பாலில் கலந்து குடிக்கும் முறை:
ஒரு கிராம் தூய பெருங்காயத்தை ஒரு மண் பானையில் தண்ணீரில் 72 மணி நேரம் ஊற வைக்கவும். அது சரியாகக் கரைந்ததும், ஒரு ஸ்பூன் தண்ணீரை 200 மில்லி வெதுவெதுப்பான பாலுடன் கலந்து, காலை மற்றும் இரவு உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.
Also Read : பெருங்காயத்திற்கு இப்படியொரு வரலாறா..? கூடவே அது தரும் நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!
பாலுடன் பெருங்காயத்தை கலந்து குடிக்கும் போது, துவரம் பருப்பு, கத்தரிக்காயை தவிர்க்கவும். இரவில் தயிர், பழம், பழச்சாறு, சாட், ஊறுகாய், சாலட் சாப்பிட வேண்டாம். காலை உணவின் போது கொய்யா, மோர், மாதா, பாகற்காய், பப்பாளி சாப்பிடுவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asafoetida, Health tips, Milk