Home /News /lifestyle /

நீரிழிவு நோய் முதல் செரிமான பிரச்சனை வரை அனைத்திற்கும் தீர்வு கொடுக்கும் நெல்லிக்காய்!

நீரிழிவு நோய் முதல் செரிமான பிரச்சனை வரை அனைத்திற்கும் தீர்வு கொடுக்கும் நெல்லிக்காய்!

நெல்லிக்காய்!

நெல்லிக்காய்!

நெல்லிக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலில் விரைவாக கரைந்து, சர்க்கரையை உறிஞ்சும் செயல்முறையை மெதுவாக்குகிறது.

நெல்லிக்காய் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பழம் ஆகும். இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. அப்படிப்பட்ட இந்த பழத்தினை குளிர்காலத்தில் உட்கொள்ளும் போது இவை சிறந்த பலன்களை தருகின்றன. இது ஒரு முழுப் பொக்கிஷம் ஆகும். இந்தியாவில் இது "சூப்பர் ஃப்ரூட்" என்று அடிக்கடி குறிப்பிடப்படுவதற்கான காரணம் ஆம்லாவில் வைட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. 20 ஆரஞ்சுகளில் இருக்கும் வைட்டமின் சி சத்துக்கள் சுமார் 100 கிராம் நெல்லிக்காய்களில் உள்ளது.

நெல்லியில் 80% நீர்ச்சத்து நிறைந் திருக்கிறது. இதனுடன் புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் இரும்புச்சத்து, பாஸ்பரம், கரோடின் பாலிபினால்,வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்திருக்கிறது. எனவே, பல நற்குணங்களை கொண்ட இந்த நெல்லிக்காயை குளிர்காலத்தில் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பின்வருமாறு காண்போம்.

நீரிழிவு நோய்:

நெல்லிக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலில் விரைவாக கரைந்து, சர்க்கரையை உறிஞ்சும் செயல்முறையை மெதுவாக்குகிறது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதையும் குறைக்கிறது. இது வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்தது.

செரிமானம்:



செரிமானம் மற்றும் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு நெல்லிக்காயை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நெல்லிக்காயை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியைத் தவிர்க்க முடியும். நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால், இது மற்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது.

சிறுநீரகம்:



இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. சிறுநீரகம் வெளியேறுவதில் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த சிறுநீர் பெருக்கியாக நெல்லிச்சாறு செயல்படுகிறது. அதிகப்படியான நீர்ச்சத்துக்களைக் கொண்டிருக்கும் நெல்லிக்கனி சிறுநீரகத்தில் படியும் சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதைத் தடுத்து அவற்றைக் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றது.தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறு தடுக்கப்படுவதோடு சிறுநீர் பிரிவதிலும் பிரச்சனை இருக்காது.

கண்கள்:



நெல்லிக்காயை உட்கொள்வதும் நம் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் ஏ, கண்ணின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் ஏ மாகுலர் சிதைவின் அபாயத்தையும் குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, மக்களிடையே நோய் எதிர்ப்புச் சக்தி பற்றிய விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆம்லாவில் வைட்டமின் சி மற்றும் ஆல்கலாய்டுகள், பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போதுமான அளவில் உள்ளன.

நினைவாற்றல்:

நெல்லிக்காயின் நுகர்வு நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் அதில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Amla

அடுத்த செய்தி