ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மாலை டீ டைமை சிறப்பாக மாற்றும் உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ்... ரெசிபி இதோ!

மாலை டீ டைமை சிறப்பாக மாற்றும் உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ்... ரெசிபி இதோ!

ஃப்ரைடு மசாலா பொடேடோஸ்

ஃப்ரைடு மசாலா பொடேடோஸ்

இந்த சுவையான ஸ்நாக்ஸை நம் கிச்சனில் இருக்கும் சில முக்கிய மற்றும் எளிய மசாலா பொருட்களை பயன்படுத்தி அரைமணி நேரத்திற்குள்ளாகவே செய்து முடித்து விடலாம். மாலை டீ டைமிற்கு ஏற்ற ஸ்னாக்ஸாக இது இருக்கும். இதற்கு பெயர் ஃப்ரைட் மசாலா பொட்டேட்டோஸ் (Fried Masala Potatoes) ஆகும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மழை மற்றும் குளிர் காலத்தின் மாலை பொழுதுகளில் வித்தியாசமான ஸ்நாக்ஸ்களை தயாரித்து சாப்பிடுவது இதமான கிளைமேட்டை போலவே நம் மனதையும் இதமாக்கும். எளிதாக கிடைக்க கூடிய உருளைக்கிழங்குகளை வைத்து தயாரிக்கப்படும் பல ஸ்நாக்ஸ்களின் சுவை நம்மை கட்டி போட்டு விடும்.

அந்த வகையில் தற்போது உருளைக்கிழங்கை கொண்டு தயாரிக்கும் ஒரு சூப்பர் ரெசிபியை பற்றி பார்க்க போகிறோம். இந்த சுவையான ஸ்நாக்ஸை நம் கிச்சனில் இருக்கும் சில முக்கிய மற்றும் எளிய மசாலா பொருட்களை பயன்படுத்தி அரைமணி நேரத்திற்குள்ளாகவே செய்து முடித்து விடலாம். மாலை டீ டைமிற்கு ஏற்ற ஸ்நாக்ஸாக இது இருக்கும். இதற்கு பெயர் ஃப்ரைட் மசாலா பொட்டேட்டோஸ் (Fried Masala Potatoes) ஆகும்.

சிறந்த ஊட்டசத்துகள் அடங்கிய உருளைக்கிழங்குகளை ஒரே நேரத்தில் மிதமான அளவு சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே ருசியாக இருக்கிறது என்பதற்காக மிக அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. சரி, இப்போது ஃப்ரைட் மசாலா பொட்டேட்டோஸிற்கான ரெசிபியை பார்க்கலாம்.

வறுத்த மசாலா உருளைக்கிழங்கு செய்வதற்கு தேவையான பொருட்கள்:

தோலுடன் கூடிய சிறிய சிறிய உருளைக்கிழங்கு - 200 கிராம்

சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை - 2 கைப்பிடி

பிளாக் பெப்பர் - 1 டீஸ்பூன்

லெமன் ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

சாட் மசாலா - 1 டீஸ்பூன்

ட்ரை மேங்கோ பவுடர் - 1 டீஸ்பூன்

தேவைக்கேற்ப பூண்டு

தேவைக்கேற்ப உப்பு

தேவைக்கேற்ப தண்ணீர்

தேவைக்கேற்ப ரீஃபைன்ட் ஆயில்

வறுத்த மசாலா உருளைக்கிழங்கு எப்படி செய்வது.?

தோலுடன் எடுத்து வைத்துள்ள சிறிய அளவிலான உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஒரு கடாயை எடுத்து கொண்டு அதில் ரீஃபைன்ட் ஆயிலை ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். கடாயில் ஊற்றப்பட்ட ஆயில் போதுமான அளவு சூடானதும் பூண்டு பற்கள் மற்றும் கழுவி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை கடாயில் போட்டு நன்கு வதக்கவும்.
ஒருகட்டத்தில் கடாயில் வதக்கப்பட்ட உருளைக்கிழங்கு பழுப்பு நிறமாக மாறியதும் அதனுடன் எடுத்து வைத்துள்ள சிவப்பு மிளகாய் தூள், பிளாக் பெப்பர், ட்ரை மேங்கோ பவுடர், சாட் மசாலா மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
கடாய் அடிபிடித்து விடாமல் இவை அனைத்தையும் நன்கு வறுக்கவும். பின் தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு கலந்து எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி கொத்தமல்லி தழை மற்றும் லெமன் ஜூஸை சேர்க்கவும்.
போதுமான வரை வேக வைத்த பிறகு அடுப்பை அணைத்து கடாயை கீழிறக்கி அலங்காரத்திற்காக மேலே சிறிது கொத்தமல்லி தழை தூவவும்.
First published:

Tags: Evening Snacks, Potato recipes