Fresh Veggies Day 2022 : ரெயின்போ வெஜிடபிள்ஸ் பேக் முதல் மயோனைஸ் சாண்ட்விச் வரை.. காய்கறிகளை உள்ளடக்கிய 5 ரெசிபீஸ்
Fresh Veggies Day 2022 : ரெயின்போ வெஜிடபிள்ஸ் பேக் முதல் மயோனைஸ் சாண்ட்விச் வரை.. காய்கறிகளை உள்ளடக்கிய 5 ரெசிபீஸ்
ஃபிரெஷ்ஷான காய்கறிகள் தினம் (Fresh Veggies Day)
காய்கறிகளை சார்ந்த இரு அனுசரிப்பு தினங்கள் அடுத்தடுத்த நாள் கொண்டாடப்படுவது மக்களிடையே ஃபிரெஷ்ஷான காய்கறிகளை சாப்பிடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
பொதுவாக கோடை கால பருவத்தில் ஃபிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை நம்மால் அதிகம் பார்க்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16 அன்று ஃபிரெஷ்ஷான காய்கறிகள் தினம் (Fresh Veggies Day) கடைபிடிக்கப்படுகிறது. புதிய ஃபிரெஷ்ஷான காய்கறிகள் ஏராளமாக கிடைக்கும் ஆண்டின் நேரம் இது.
ஜூன் 16 ஃபிரெஷ் வெஜ்ஜிஸ் டே கொண்டாடப்படும் நிலையில், ஜூன் 17 (நாளை) நேஷ்னல் ஈட் யுவர் வெஜ்ஜிஸ் டே (National Eat Your Veggies Day) அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தேசிய புதிய பழங்கள் மற்றும் காய்கறி மாதத்தின் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. காய்கறிகளை சார்ந்த இரு அனுசரிப்பு தினங்கள் அடுத்தடுத்த நாள் கொண்டாடப்படுவது மக்களிடையே ஃபிரெஷ்ஷான காய்கறிகளை சாப்பிடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
Fesh Veggies Day 2022-ஐ கொண்டாடும் இந்த நேரத்தில் அறுசுவை விருந்து சாப்பிட ஃபிரெஷ்ஷான காய்கறிகளை கொண்டு நீங்கள் செய்யக்கூடிய சில சமையல் குறிப்புகளை இங்கே தொகுத்துள்ளோம்.
இது கோடைகாலத்திற்கான ஆரோக்கியமான, சத்தான, சுவையான மற்றும் வண்ணமயமான உணவாகும். இது முக்கியமாக ஃபிரெஷ்ஷான தக்காளி, சுரைக்காய், இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் ஸ்குவாஷ் கொண்டு செய்யப்படுகிறது. இறைச்சியை விரும்பாத சைவ உணவு பிரியர்களுக்கு ஏற்றது மற்றும் முற்றிலும் சுவையானது, மலிவான மற்றும் சத்தான காய்கறிகளின் முழு தொகுப்பை கொண்டுள்ளது.
2. வெஜிடபிள் ஜால்ஃப்ரேசி (Vegetable Jalfrezi):
இது இந்தோ-சீன ஸ்ட்ரீட் ரெசிபியாகும். இது இந்திய பாணியின் குறிப்பைக் கொண்ட இந்தோ-சீன சாஸில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ரெசிபியில் காய்கறிகள், பனீர் மற்றும் அனைத்தும் ஒன்றாக டேங்கியான தக்காளி சாஸில் சமைக்கப்படுகிறது.
3. பேக்ட் வெஜிடபுள்ஸ் வித் ஒயிட் சாஸ் (Baked Vegetables With White Sauce):
இத்தாலியன் டச்-உடன் காய்கறிகளில் ஒயிட் சாஸை சேர்ப்பதன் மூலம் அனைத்து சத்தான காய்கறிகளையும் ஒரே நேரத்தில் ஒரே டிஷ்ஷில் சேர்த்து செய்யக்கூடிய சத்தான ரெசிபியாகும்.
வறுத்த காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ரோஸ்ட்டட் வெஜிடபுள் சாலட் ஒரு ஆரோக்கியமான ரெசிபியாகும். இந்த ரெசிபியை எளிதாக மற்றும் விரைவாக செய்து முடிக்கலாம்.சிம்பிளான சாலட்டை யாரும் விரும்புவதில்லை ஆனால் இந்த சூப்பர் ரெசிபி ஊட்டச்சத்து மதிப்பில் சமரசம் செய்யாது மற்றும் சாலட்டில் கூடுதல் சுவையை அளிக்கிறது.
5. மயோனைஸ் சாண்ட்விச் (Mayonnaise Sandwich):
அனைத்து வண்ணமயமான காய்கறிகளுடன் கூடிய கோடை காலத்திற்கான எளிதான மற்றும் மிகவும் சுவையான காலை உணவுகளில் ஒன்று இந்த மயோனைஸ் சாண்ட்விச் ஆகும். மயோனைஸ் மற்றும் காய்கறிகளுடன் உங்களுக்கு பிடித்த மசாலாப் பொருட்களையும் சேர்த்து உங்கள் விருப்பப்படி இதை செய்யலாம்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.