முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பலவித நன்மைகளை தரும் தினை இட்லி செய்வது எப்படி?

பலவித நன்மைகளை தரும் தினை இட்லி செய்வது எப்படி?

இட்லி

இட்லி

தினை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். தினையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை உண்டு.

  • Last Updated :

தினை சிறுதானியங்களில் முக்கியமானது. தானியங்களில் அதிகம் பயிரிடப்படுவதில் இரண்டாவது இடம் இதற்கு உண்டு என்றும் சொல்லலாம். இதை உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள். இதை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். தினையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை உண்டு. இதில் இட்லி செய்வது எப்படி என்று பார்க்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தினை - 1 கப்

இட்லி அரிசி -1 கப்

உளுந்து- 1\2 கப்

வெந்தயம்- 1\4 தேக்கரண்டி

உப்பு

தினை

செய்முறை:

அரிசி, தினை , பருப்பு, வெந்தயம் சிறிதளவு ஆகியவற்றை சுத்தம் செய்து தனித்தனியாக கலந்து 2 மணிநேரம் வரை ஊற வைக்கவும்.

முதலில் பருப்பு, வெந்தயத்தை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும்.

பிறகு அரிசியையும் தினையையும் கலந்து அரைத்து, அதையும் அதே பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.அ அதன் பின்னர்  உப்பு சேர்த்து, நன்கு கலக்கவும்.

மேலும் படிக்க...திருவோணம் ஸ்பெஷல் உணவு... அடை பிரதமன் செய்ய ரெசிபி....

அதன் பின்னர் நொதிப்பதற்கு அப்படியே விட்டு விட்டு, நொதித்தவுடன், மாவு பொங்கியிருக்கும். நீளமான கரண்டியில் நன்கு கலக்க வேண்டும். இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுத்தால் தினை இட்லி ரெடி. மாவு நன்றாக பொங்கி வர சுமார் 6-8 மணிநேரம் அல்லது ஒரு இரவு எடுத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தக்காளி சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க... திருவோணம் ஸ்பெஷல் சுவையான அவியல்!

First published:

Tags: Food, Millet Recipes