தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் ஏராளமானோர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். உடல் எடை அதிகரித்தால் அதைக் குறைப்பது என்பது மிகவும் கடினம். அந்த கஷ்டம் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு தான் தெரியும். நிறைய பேர் உடல் எடையைக் குறைக்க டயட் இருக்கிறார்கள். அதோடு, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஆனால் இந்த இஞ்சி மற்றும் கொத்தமல்லி கொண்டு தயாரிக்கப்படும் பானம் உடல் எடையை ஈஸியாக குறைக்க உதவும்.
அதற்கு தினமும் இஞ்சி மற்றும் கொத்தமல்லி தண்ணீரை குடித்து வர வேண்டும். இப்போது இந்த தண்ணீர் எப்படி தயாரிப்பது மற்றும் அது எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பதையும், அதனை எப்போது குடிக்க வேண்டும் என்பதையும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
இஞ்சி மற்றும் கொத்தமல்லி : சமையலறையில் காணப்படும் பொதுவான பொருட்கள் தான் இஞ்சி மற்றும் கொத்தமல்லி. இந்த இரண்டு பொருட்களுமே ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால், அது நாட்டு மருத்துவத்தில் பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த 2 பொருட்களையும் ஒன்றாக எடுக்கும் போது, அது உடல் எடையைக் குறைக்க உதவுவதைத் தவிர, உடலுக்கு பல நன்மைகளையும் வழங்குகிறது.
எடை குறைப்பில் இஞ்சியின் நன்மைகள் :
இஞ்சி சாற்றினை காலையில் எழுந்ததும் குடிக்கும் போது, அது உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரைக் குறைக்க உதவுவதோடு, நல்ல செரிமானத்திற்கும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒருவரது செரிமான செயல்முறையும், உடலின் மெட்டபாலிசமும் சிறப்பாக இருந்தால், தானாகவே உடலில் உள்ள கொழுப்புக்களும், அதிகப்படியான எடையும் குறைய ஆரம்பிக்கும்.
எடை குறைப்பில் கொத்தமல்லியின் நன்மைகள் :
ஒருவரது செரிமான மண்டலம் பிரச்சனையின்றி சிறப்பாக செயல்பட்டால், அதுவே உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். அந்த வகையில் கொத்தமல்லி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, உண்ணும் உணவுகளை திறம்பட ஜீரணிக்கிறது. மேலும் மல்லியில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது.
Also see... கிரிஸ்பியான சிக்கன் பாப்கார்ன் செய்ய ரெசிபி...
இஞ்சி-மல்லி நீரைத் தயாரிப்பது எப்படி?
1. முதல் 1/2 இன்ச் இஞ்சி மற்றும் 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை ஒரு டம்ளர் நீரில் போட வேண்டும்.
2. அதனை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும்.
3. மறுநாள் காலையில் அந்த நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
4. பின் அந்நீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
5. இதில் விரும்பினால் தேன் கலந்தும் குடிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ginger, Warm Drinks, Weight loss