முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Weight Loss | உடல் எடையை குறைக்கிறீங்களா? அப்போ இந்த உணவுகளை அறவே தவிர்த்திருங்க..!

Weight Loss | உடல் எடையை குறைக்கிறீங்களா? அப்போ இந்த உணவுகளை அறவே தவிர்த்திருங்க..!

ஐஸ்கிரீம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஃபேவரட் தான். ஆனால், அதில் அதிகளவில் சர்க்கரை, கலோரிகள் அடங்கியுள்ளன.

ஐஸ்கிரீம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஃபேவரட் தான். ஆனால், அதில் அதிகளவில் சர்க்கரை, கலோரிகள் அடங்கியுள்ளன.

ஐஸ்கிரீம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஃபேவரட் தான். ஆனால், அதில் அதிகளவில் சர்க்கரை, கலோரிகள் அடங்கியுள்ளன.

  • Last Updated :

உடல் எடையை குறைக்கும் படலத்தில் நீங்கள் உண்ணும் உணவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. தினசரி உடலில் இருந்து நீங்கள் எரிக்கும் கலோரிகளை விட குறைவான கலோரிகள் கொண்ட உணவுகளையே உண்ண வேண்டும். சரி, சில உணவுகளை நீங்கள் உடல் எடை குறைப்பின் போது அவ்வப்போது எடுத்துக்கொள்வது தவறில்லை. ஆனால், ஜங்க் போன்ற சில உணவுகளை எடை குறைப்பின்போது நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அவை குறித்து பார்க்கலாம்.

ஃப்ரைடு உணவுகள்:

ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் உள்ளிட்ட ஃப்ரைடு உணவுகளில் பொதுவாக அதிக அளவிலான கலோரிகள், உப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளன. அவைகளை உண்பது நம் உடலில் உள்ள ஃபைபர் மற்றும் ப்ரோட்டீன் பற்றாக்குறையை அதிகரித்துவிடும்.

கேண்டீஸ்:

கேண்டி பார்களில் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய வகையிலான அதிக கலோரிகள், சர்க்கரை, கொழுப்பு ஆகியவை நிறைந்துள்ளன. இருப்பினும், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் 70 சதவீதம் மட்டும் கொக்கோ கலந்த டார்க் சாக்லேட்டுகளை சிறிதளவு அடிக்கடி உண்பதில் தவறில்லை.

அதிக சர்க்கரை கலந்த பானங்கள்:

சோடா, பராசஸ்டு பானங்கள், ஜூஸ் ஆகியவற்றில் மிக அதிக அளவில் சர்க்கரை கலக்கப்படுவதால் அவற்றை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். அவற்றை எடுத்துக்கொள்வது உடலில் உள்ள ஊட்டச்சத்துகளை குறைத்துவிடும் என்பதை மறவாதீர்கள்.

மைதா:

அனைத்து தரப்பினருக்கும் மைதா என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு உணவாகும். கலோரிகளே இல்லாத ஊட்டச்சத்து மதிப்பில்லாத மைதாவால் உடலுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. மைதாவிற்கு பதிலாக கோதுமை, தானியங்கள் ஆகிய உணவுகளை எடுத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும்.

ஐஸ்கிரீம்:

ஐஸ்கிரீம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஃபேவரட் தான். ஆனால், அதில் அதிகளவில் சர்க்கரை, கலோரிகள் அடங்கியுள்ளன. மேலும், புரதச்சத்து மற்றும் ஃபைபர் சத்து அதில் இருக்காது. எனவே, உடல் எடை குறைப்பில் ஐஸ்கிரீமை தவிர்ப்பது நல்லது.

Must Read | சாப்பிடுங்க… ஆனா வெயிட் குறையும்… உடல் எடையை குறைக்க உதவும் 4 ஸ்நாக்ஸ் லிஸ்ட் இதோ!

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்:

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான பேக்கன் போன்ற சில அசைவ உணவுகளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில், கலோரிகள் சற்று அதிகளவில் இருந்தாலும், உப்பு அளவு அதிகம் உள்ளதால் ஊட்டச்சத்தும் குறைவாகவே இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடிப்பழக்கம்:

top videos

    ஆல்கஹாலில் உடல் எடையை அதிகரிப்பதற்கான முக்கிய கூறுகள் உள்ளன. அதில் கலோரிகளோ, ஊட்டச்சத்தோ இல்லாத வெறும் சர்க்கரையால் ஆன பானம் என்பதால் அதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

    First published:

    Tags: Health Benefits, Healthy Life, Weight loss