டைப் 2 நீரிழிவு நோயுடன் வாழ்ந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒரு ஆரோக்கியமான உணவு உங்கள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையை நிர்வகிக்கும். நீரிழிவு விஷயத்தில் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரையை உட்கொள்வது பெரும்பாலும் ஊக்கமளிக்காது. ஆனால், சில சமயங்களில் தவறான கருத்துகளால் மக்கள் சத்தான உணவுகளையும் தவிர்க்கிறார்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்படும்போது நீங்கள் எதை உட்கொள்ள வேண்டும் மற்றும் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்:
நீங்கள் எந்த உடல்நலக் கோளாறாலும் அவதிப்படும்போதும் சத்தான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் குறைக்கிறது மற்றும் உடல் உள் செயல்பாடுகளை மிகவும் திறமையாகச் செய்ய உதவுகிறது.
Must Read | சாதம் சாப்பிட்ட பிறகு சோர்வாக இருப்பது ஏன்? தடுக்க இரண்டே வழிகள்!
எந்தவொரு உடல்நலக் கோளாறாலும் பாதிக்கப்படும்போதும் ஆரோக்கியமான உணவின் பொன்னான விதி என்னவென்றால், நீங்கள் ஒரு உணவை மட்டுமே சாப்பிடுவதற்கு உங்களை கட்டுப்படுத்தக்கூடாது. உங்கள் தட்டில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உணவுகள் நிரப்பப்பட வேண்டும். அவை உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கவும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதைத் தடுக்கவும் உதவும். டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சில உணவு:
பழங்கள்- ஆப்பிள், ஆரஞ்சு, பெர்ரி, முலாம்பழம், பேரீச்சம்பழம்
காய்கறிகள்- ப்ராக்லி, காலிஃபிளவர், கீரை, வெள்ளரிகள், பாகற்காய்
முழு தானியங்கள்- ஓட்ஸ், பழுப்பு அரிசி, தினை
பருப்பு வகைகள்- பீன்ஸ் மற்றும் பருப்பு
கொட்டை வகைகள்- பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா
விதைகள்- சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் ஆளி விதைகள்
Must Read | நீண்ட ஆயுளுக்கு இந்த உணவுகளை சாப்பிடுங்கள்… அறிவியல் ரீதியாக நிரூபணம்..!
புரதம் நிறைந்த உணவுகள்- முட்டை, மீன் மற்றும் கோழி
இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகள் -ஆலிவ் எண்ணெய், எள் எண்ணெய்.
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்படுத்த வேண்டிய உணவுகள் குறைவாகவே உள்ளன. இந்த உணவுகளில் கிளைசெமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. இரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கிறது. தவிர, மற்ற ஆரோக்கியமான உணவுகளிலிருந்து அவற்றில் உள்ள சத்துக்களை நீங்கள் எப்போதும் பெறலாம். நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்:
கொழுப்பு இறைச்சி- மட்டன், மாட்டிறைச்சி
ஃபுல்-ஃபேட் பால் வகைகள்- பால், வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி (cheese)
இனிப்புகள்- மிட்டாய், பிஸ்கட்டுகள், பேக்கரி உணவுகள், ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகள்
இனிப்பு பானங்கள்- சோடா மற்றும் எனர்ஜி பானங்கள்
ஸ்வீட்டனர்ஸ்- வெள்ளை சர்க்கரை, பழுப்பு சர்க்கரை, தேன், மேப்பிள் சிரப்
பதப்படுத்தப்பட்ட உணவுகள்- சிப்ஸ், மைக்ரோவேவ் பாப்கார்ன், பதப்படுத்தப்பட்ட இறைச்சி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diabetes, Healthy Lifestyle, Type 2 diabetic