உடல் எடையை குறைக்க வேண்டுமா..? குளிர்காலத்திற்கு ஏற்ற ’டயட் பிளான்’ இதோ..!

நமது உடலில் போதுமான அளவு இரும்புச்சத்தை பராமரிப்பது தற்போதைய சூழ்நிலையில் இன்னும் முக்கியமானது. 'Open Forum Infectious Disease' இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இரும்புசத்துக்கும் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தது. உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 50 பேரை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர், அவர்களில் 45 பேர் அசாதாரணமாக சீரம் இரும்பு அளவைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

காலை உணவை தவிர்ப்பதாலோ, பட்டினி கிடப்பதாலோ உடல் எடை குறைந்துவிடாது.

  • Share this:
உடல் எடையை குறைக்க நீங்கள் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் உடலின் வளர்சிதை மாற்றமானது காலை நேரத்தில் வேகமாக இருக்கும் என்பதால் காலை உணவை கட்டாயம் தவிர்க்க கூடாது. குளிர்காலம் பெரும்பாலும் ஒரு நபரை சோம்பேறியாக உணர வைக்கிறது. குளிர்ந்த காலநிலை மக்கள் தங்கள் போர்வைகளின் அரவணைப்பு மற்றும் இதமாக மக்களை வைத்திருக்க தூண்டுகிறது. இது நம் வழக்கமான செயல்பாடுகளை பாதிக்கிறது.

குறிப்பாக, எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் தங்கள் உணவு கட்டுப்பாடு அட்டவணையை தொடர பெரும் சவாலாக உணர்கின்றனர்.அதற்காக, காலையில் எப்படி பட்ட உணவை வேண்டுமானாலும் உட்கொள்ளலாம் என்று இருக்காமல், ஆரோக்கியமான உணவு மற்றும் பழங்களை சாப்பிடலாம். வெறும் ஜுஸ் குடிப்பது பழங்களில் இருக்கக்கூடிய நார்ச்சத்து கிடைக்காமல் போய்விடும். எடை இழப்பதென்பது எளிதாக ஒன்றுதான். எனினும், நிரந்தரமாக எடை இழப்பதென்பது ஒரு கடினமான வேலை. பெரும்பாலும் எடை குறைப்பு முறைகள் தற்காலிகமானவைகள் தான்.

நிரந்தரமாக நம் எடையை சீராக வைக்க, தினசரி நீங்கள் சில‌ ஆரோக்கியமான பழக்கத்தை இணைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதை நீங்கள் தினசரி வாழ்வில் ஒரு நிரந்தர பகுதியாக செய்ய முயற்சி செய்ய வேண்டும். குளிர்காலத்தில், நீண்ட நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங்க்கு வெளியே செல்வது எளிதல்ல. மேலும், குளிர்காலம் பசியை அதிகரிக்கிறது, ஏனென்றால் வெளியே வெப்பநிலை குறையும் போது உடலுக்கு தன்னைத் தக்க வைத்துக் கொள்ள உள் வெப்பம் தேவைப்படுகிறது. அதிகப்படியான கொழுப்பை எரிக்க குளிர்காலத்தில் உங்கள் உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதை அறிய இந்த உள்ளடக்கத்தை படிக்கவும்.எடை குறைப்பிற்கு உதவும் குளிர்கால காய்கறிகளும் பழங்களும்:-

இந்த குளிர்காலத்தில் நீங்கள் ஏராளமான பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளவேண்டும். குளிர்கால பழங்கள் மற்றும் காய்கறிளில் கலோரிகளில் குறைவாக உள்ளன, ஆனால் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது மற்றும் பிற அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் இருப்பதால் அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கும் மேலும் உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத உணவு உங்களை எடை அதிகரிப்புக்கு கொண்டு செல்லும். ப்ரோக்கோலி, கேரட், பீட்ரூட், இனிப்பு உருளைக்கிழங்கு, கீரை போன்ற காய்கறிகளும், ஆரஞ்சு, பிளம்ஸ், பெர்ரி போன்ற பழங்களும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், இவை கலோரிகளில் குறைவாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகம்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்றை நீண்ட நேரம் பசிக்காமல் வைத்திருக்கும். அவை வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன, இதனால் குடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் எடையும் வேகமாக குறையும்.

புரதம் நிறைந்த உணவுகள் :

புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் வயிற்றை நீண்ட நேரம் பசியின்றி வைத்திருக்கும். மேலும் இது, உங்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது. அதிகப்படியான கொழுப்பை எரிக்க புரதமும் உதவுகிறது. ஆரோக்கியமான தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. எனவே, உங்கள் குளிர்கால உணவில் போஹா, ஓட்ஸ், சோயா, சன்னா, மூங், மசூர், முட்டை போன்றவற்றை சேர்க்கவும். நீங்கள் கலோரி அடர்த்தியான உணவுகளிலிருந்து விலகி இருக்கும்போது, நட்ஸ்கள், விதைகள், பீன்ஸ், பருப்பு வகைகள், குறைந்த அளவு இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றிலிருந்து போதுமான அளவு புரதங்கள் கிடைக்கிறது.எடை குறைப்பிற்கு விதைகள் மற்றும் நட்ஸ்கள் :

ஆளி விதையில் அதிகளவு பைபர் மற்றும் புரோட்டின் உள்ளது, அதேசமயம் குறைந்தளவு கலோரிகள் உள்ள இது எளிதில் செரிமானம் அடையக்கூடியது. ஆளிவிதை, எள், சியா மற்றும் பூசணி விதைகள் போன்ற விதைகள் உடல் எடை குறைக்க உதவுகின்றன. இவை தவிர, குளிர்காலத்தில் உங்கள் உணவில் பேரீட்ச்சை, அக்ரூட் பருப்புகள், பாதாம், பிஸ்தா மற்றும் கொடி முந்திரி போன்ற உலர்ந்த பழங்களும் அடங்கும். மிக சத்தான உணவுகளில் ஒன்றாக திணை கருதப்படுகிறது.

இதனை முழு தானியமாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதில் அமினோ அமிலம், புரோட்டின், பைபர், மெக்னீசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. உடல் எடை குறைப்பதில் இதன் குறைவான க்ளெசமிக் அளவால் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஓட்மீலில் பீட்டா க்ளுகான் என்னும் பொருள் இருப்பதால் இதனை சாப்பிடும்போது நிறைவாக இருக்கும். இதில் மிக குறைந்த அளவே கலோரிகள் இருக்கிறது. இது செரிமானத்தை தாமதப்படுத்தி, நீண்ட நேரம் உங்களை நிறைவாகவே வைத்திருக்கும். ஓட்ஸுடன் பழங்கள், யோகர்ட் போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

உடல் எடையை குறைக்க நடைபயிற்சி மட்டும் செய்தால் போதாது..! இதனையும் கட்டாயம் பின்பற்றுங்கள்...

உடல் எடை குறைப்பிற்கு முழு தானியங்கள் :

உங்கள் குளிர்கால உணவில் முழு கோதுமை, சோயா அட்டா, பஜ்ரா, ஜோவர், ராகி மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்களை சேர்க்கவும். இவை நார்ச்சத்து மற்றும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இந்த உணவுகள் அதிகப்படியான கொழுப்பை எரிப்பதன் மூலம் உடல் பருமனைத் தடுக்க உதவுகின்றன. சாதாரண உணவு பொருட்களை விட, கலோரிகள் குறைந்த உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

தினந்தோறும் வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள், நார்ச்சத்து, பைட்டோ ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஐந்து வெவ்வேறு காய்கறிகளையும், மூன்று வேறுபட்ட பழங்களையும் உட்கொள்ள வேண்டும். மேலும் நாம், நமது அன்றாட உணவு முறையில் முழு தானிய வகையை சேர்ந்த பிரௌன் அரிசி, பிரான் ஃபிளேக்ஸ், பாப்கார்ன், பார்லி மற்றும் சோளம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வுணவுகள் உடலை அதிக நேரம் பசியின்றி வைத்திருந்து, உடலுக்கு தேவையான நார்ச்சத்தையும் வழங்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sivaranjani E
First published: