50 வயதை தாண்டிய பெண்கள் கவனத்திற்கு… சாப்பிட வேண்டிய உணவுகளும்… இன்றே தவிர்க்க வேண்டிய உணவுகளும்..!

உங்களுக்கு காபி மற்று தேநீர் பிடிக்கும் என்றால், அதிலிருந்தும் விலகி இருப்பது சிறந்தது.

உங்களுக்கு காபி மற்று தேநீர் பிடிக்கும் என்றால், அதிலிருந்தும் விலகி இருப்பது சிறந்தது.

  • Share this:
50 வயதிற்குப் பிறகு உடலில் வளர்சிதை மாற்றம் குறைகிறது, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது, சில ஊட்டச்சத்து தேவைகள் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கட்டத்தில், நீங்கள் உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கவும், வயது மற்றும் மாதவிடாய் நிறுத்தத்தில் மிகவும் பொதுவான நிலைமைகளைத் தடுக்கவும் புத்திசாலித்தனமான உணவுத் தேர்வுகளைச் செய்ய வேண்டும். 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு எதைத் தேர்ந்தெடுப்பது மற்றும் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த விவரங்கள் இங்கே.

சாப்பிட வேண்டியவை:

கொட்டை வகைகள்:

கொட்டைகள் சாப்பிடுவது உண்மையில் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடல் எடை கட்டுப்பாட்டை எளிதாக்குகிறது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. கொட்டைகள் தாவர புரதம், இதய ஆரோக்கியம், நிறைவுறா கொழுப்பு, பொட்டாசியம், நார் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வயதாகும்போது வழங்குகின்றன. உண்மையில், 1 1/2 அவுன்ஸ் பிஸ்தாவை 12 வாரங்களுக்கு சாப்பிட்ட பெண்கள் தங்கள் உடல் எடையை பாதிக்காமல் உணவின் தரத்தை மேம்படுத்தினர் என்பது தெரியவந்துள்ளது.

பெர்ரி:

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் பிற பழங்கள் சர்க்கரை இல்லாமல் சுவையாக இருக்கும். எனவே, இந்த பழங்கள் அதிக பதப்படுத்தப்பட்ட, கலோரி நிரம்பிய இனிப்புகளின் இடத்தை எளிதாகப் பெறலாம். அவை உங்களை அதிக நேரம் முழுதாக வைத்திருக்க சில நார்ச்சத்தை வழங்கும். ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி வைட்டமின் கே-ன் ஆதாரமாகும். இது எலும்பு வலிமையை கூட்டும் புரதமான ஆஸ்டியோகால்சின் தயாரிக்க அவசியம். சில ஆராய்ச்சிகள் வைட்டமின் கே-ன் அதிக உட்கொள்ளல் வயதான பெண்களின் சிறந்த எலும்பு ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று கூறுகின்றன.

Must Read | 60 வயதிலும் உடலை மாஸாக்கலாம்! இந்த உடற்பயிற்சிகள் போதும்!

தயிர்:

தயிர் என்பது புரோபயாடிக்குகள் என்றும் அழைக்கப்படுகிறது. அவை நன்மை பயக்கும் பாக்டீரியாவுடன் பெருங்குடலை காத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நேஷனல் யோகர்ட் அசோசியேஷனின் லைவ் & ஆக்டிவ் கல்ச்சர்ஸ் சீல் தயிரை அதிக LAC-யுடன் குறிக்கிறது. தயிரில் அதிக கலோரி எரிக்கப்படுவதால், அதிக நேரம் உங்களை முழுதாக வைத்திருக்கும் புரதம் நிறைந்துள்ளது. மிட்லைஃப் எடை அதிகரிப்பிலிருந்து பாதுகாப்பதைத் தவிர, தயிரை LAC-யுடன் தொடர்ந்து உட்கொள்வது ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை ஊக்குவிக்கவும் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவும்.

​​தவிர்க்க வேண்டிய உணவுகள்:

காபி மற்றும் தேநீர் பானங்கள்:

சர்க்கரை சோடா மற்றும் சர்க்கரை பழ பானங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க உங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுக்கு காபி மற்று தேநீர் பிடிக்கும் என்றால், அதிலிருந்தும் விலகி இருப்பது சிறந்தது.

அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்:

50 வயதிற்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவது கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிப்ஸ்:

50 வயதிற்குப் பிறகு, கலோரி தேவைகள் குறையும் மற்றும் இரண்டு அவுன்ஸ் சிப்ஸை சாப்பிடுவதால் உங்கள் தினசரி கலோரிகளின் அளவில் சுமார் 300 கலோரிகளை எளிதாக பெற்றுவிடுவீர்கள். அது வேண்டாம். வேகவைத்த காய்கறிகள் வறுத்த சிப்ஸ்களை விட சிறந்த ஊட்டச்சத்தை தரும்.
Published by:Archana R
First published: