Home /News /lifestyle /

ஹோட்டல் மெனுவில் இனி ஊட்டச்சத்து விவரங்களும் பதிக்கப்படும் - உணவுப் பாதுகாப்புத் துறை

ஹோட்டல் மெனுவில் இனி ஊட்டச்சத்து விவரங்களும் பதிக்கப்படும் - உணவுப் பாதுகாப்புத் துறை

கோப்புப்படம்

கோப்புப்படம்

நுகர்வோர் தாங்கள் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை தெரிந்துகொள்வதில்லை.

  • News18
  • Last Updated :
    ஹோட்டலில் உணவுப் பட்டியல் அடங்கிய மெனு கார்டில் அந்தந்த உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களும் காட்சிப்படுத்த உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஹோட்டல்களில் ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இது போன்ற நடவடிக்கை மக்களுக்கு நல்ல தகவலாகவும், உடல் ஆரோக்கியத்தை கவனிக்கவும் உதவியாக இருக்கும்.

    மேலும் இதனால் சுகாதாரமற்ற, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகளை மக்கள் உண்பதை தவிர்க்கலாம்.

    இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி பேசுகையில் “நுகர்வோர் தாங்கள் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை தெரிந்துகொள்வதில்லை. எனவே அவர்கள் அதன் ஊட்டச்சத்தை தெரிந்துகொண்டு சாப்பிட ஏதுவாக அந்தந்த உணவுகளுக்குக் கீழ் புரதம், கொழுப்பு, இரும்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் உள்ளிட்ட சத்து வகைகளை பிரித்து அவற்றின் சதவீதத்தைக் குறிப்பிட்டு நுகர்வோருக்கு காட்சிப்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் இந்த முறை நடைமுறைபடுத்தப்படும் “ எனப் பேசினார்.

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி