ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நீரிழிவு நோயாளிகள் இந்த 7 உணவுகளை தயக்கமில்லாமல் சாப்பிடலாம்..!

நீரிழிவு நோயாளிகள் இந்த 7 உணவுகளை தயக்கமில்லாமல் சாப்பிடலாம்..!

சர்க்கரை நோயாளிகள் தயக்கமில்லாமல் இந்த உணவுகளை சாப்பிடுங்க.!

சர்க்கரை நோயாளிகள் தயக்கமில்லாமல் இந்த உணவுகளை சாப்பிடுங்க.!

ஒப்பீட்டளவில் குறைந்த கலோரி மற்றும் அதிக ஃபைபர் சத்து இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஹோம்மேட் பாப்கார்ன் சிறந்த தேர்வாக இருக்கும். 3 கப் பாப்கார்னில் 100 கலோரிகள் மற்றும் 4 கிராமுக்கு மேல் ஃபைபர் சத்து உள்ளது. இதை தயாரிக்க பயன்படுத்தப்படும் வெண்ணெய் மற்றும் உப்பின் அளவில் கவனம் தேவை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உயர் ரத்த சர்க்கரை அதாவது ஹை பிளட் சுகர் என்பது லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் நோயாக இருந்து வருகிறது. இதை ஹைப்பர் கிளைசீமியா என்றும் கூறுவார்கள். உடலில் போதுமான இன்சுலின் இல்லாததால் ரத்த பிளாஸ்மாவில் அதிகப்படியான குளுக்கோஸ் இருக்கும் ஒரு நிலை தான் உயர் ரத்த சர்க்கரை ஆகும். சில சந்தர்ப்பங்களில் உயர் ரத்த சர்க்கரை நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஹைப்பர் கிளைசீமியா ஏற்பட ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் செயல்பாடுகளின்றி இருப்பது, பிற நோய்கள் மற்றும் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய மருந்துகள் உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம். இந்த சூழலில் நீரிழிவை கட்டுக்குள் வைக்க ஆரோக்கியமான மற்றும் சரியான உணவு பழக்கங்கள் அவசியம்.

ஹை பிளட் சுகர் கண்டிஷன் உள்ளவர்கள் குறிப்பாக உணவு விஷயத்தில் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் தங்கள் டயட்டில் ஃபைபர் சத்துள்ள உணவுகளை அதிகமாகவும், கொழுப்பு மற்றும் கலோரிகள் அடங்கிய உணவுகளை குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். நீரழிவு நோயாளிகள் தயக்கமின்றி உண்ண கூடிய உணவுகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

பாதாம் : பாதாம் பெரும்பாலான மக்களுக்கு ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உயர் ரத்த சர்க்கரையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் தயக்கமின்றி சாப்பிட கூடிய நட்ஸ்களில் ஒன்றாக இருக்கின்றன பாதாம்கள். இவற்றில் புரோட்டின், நல்ல கொழுப்புகள் மற்றும் ஃபைபர் நிறைந்துள்ளது அதே நேரம் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. ரத்த சர்க்கரையை குறைப்பதிலும் பாதாம்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

தானியங்கள்: Glycemic Index என்பது உணவில் எவ்வளவு கார்போஹைட்ரேட் உள்ளது என்பதை மதிப்பிடும் ஒன்றாகும். ஒவ்வொரு உணவும் ரத்தச் சர்க்கரை அளவை (குளுக்கோஸ்) எவ்வளவு விரைவாக பாதிக்கிறது என்பதை இது காட்டுகிறது. எனவே இயற்கையாகவே, குறைந்த GI உணவுகள் உயர் ரத்த சர்க்கரை கொண்டவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் லோ கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) கொண்ட உணவுகள் ரத்த குளுக்கோஸ் அளவை நீண்டகாலத்திற்கு சிறப்பாக நிர்வகிக்க உதவும். அந்த வகையில் குறைந்த GI கொண்ட தானியங்களில் ஜோவர், பஜ்ரா, ஹோல் வீட், மல்டிகிரைன், குயினோவா மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்கள் முக்கியமானவை.

முட்டை: முட்டைகளில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. கூடவே புரோட்டின் இதில் அதிகம் நிறைந்து காணப்படுவதால் முட்டைகள் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமாக இருக்கும் முட்டைகள் நீரிழிவை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது. வாரத்திற்கு 10 - 12 முட்டைகள் வரை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம் என்றும், இதனால் அவர்களது ரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படாது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. முட்டைகளை டயட்டில் சேர்ப்பது இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்துவதோடு, வீக்கத்தையும் குறைகின்றன.

வறுத்த சன்னா: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கொண்டைக்கடலை மிகவும் சிறந்த உணவு. இதில் ஃபைபர், புரோட்டின் மற்றும் வைட்டமின் அடங்கி உள்ளன. இதில் அதிகமாக இருக்கும் ஃபைபர் உடலில் இருக்கும் ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. ஹை பிளட் சுகர் உள்ளவர்களுக்கு வறுத்த கொண்டைக்கடலை சிறந்த ஸ்னாக்ஸாக இருக்கும்.

பழங்கள் : அனைத்து பழங்களையும் நீரிழிவு நோயாளிகள் எடுத்து கொள்ள முடியாது என்றாலும் குறைந்த GI கொண்ட பல பழங்கள் இருக்கின்றன. கொய்யா, மாம்பழம், பெர்ரிஸ், பிளம்ஸ், செர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு, கிவி, அவகோடா உள்ளிட்ட பழங்கள் நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாக இருக்கின்றன.

ஹோம்மேட் பாப்கார்ன்: ஒப்பீட்டளவில் குறைந்த கலோரி மற்றும் அதிக ஃபைபர் சத்து இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஹோம்மேட் பாப்கார்ன் சிறந்த தேர்வாக இருக்கும். 3 கப் பாப்கார்னில் 100 கலோரிகள் மற்றும் 4 கிராமுக்கு மேல் ஃபைபர் சத்து உள்ளது. இதை தயாரிக்க பயன்படுத்தப்படும் வெண்ணெய் மற்றும் உப்பின் அளவில் கவனம் தேவை.

ப்ரோக்கோலி: ப்ரோக்கோலியை நறுக்கும் போது அல்லது மெல்லும் போது சல்ஃபோராபேன் என்ற கலவை உருவாகிறது. இது ரத்த சர்க்கரையை குறைக்கும் திறன் கொடுத்தாக அறியப்படுகிறது. சல்ஃபோராபேன் கல்லீரல் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்கிறது மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிப்பதாலும், ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதாலும் ப்ரோக்கோலி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த ஒரு உணவாக இருக்கிறது.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Blood Sugar, Diabetes