Home /News /lifestyle /

மனசு சரியில்லையா? சாப்பிட்டால் சரியாகிடும்...!

மனசு சரியில்லையா? சாப்பிட்டால் சரியாகிடும்...!

உணவு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம் என்கிறது அறிவியல் ஆய்வு.

உணவு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம் என்கிறது அறிவியல் ஆய்வு.

உணவு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம் என்கிறது அறிவியல் ஆய்வு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
உணவு நம் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையான ஒன்று என்பதைத் தாண்டி, இன்றைக்கு புதுப்புது உணவு வகைகளைத் தேடித் தேடி உண்டு மகிழ்வது ஒரு பழக்க வழக்கமாகவே மாறியுள்ளது.

பத்திரிகை, தொலைக்காட்சி என்பதில் தொடங்கி யூட்டியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என இணைய உலகிலும் உணவு சம்பந்தமானப் பேச்சுக்களே மிகப் பரவலாக உள்ளன. இணையத்தில் அதிகம் தேடப்படும் விஷயங்களில் ஒன்றாக உணவு இருக்கிறது. உலகமயத்துக்குப் பிந்தைய சூழலில் இளம் வயதினர் மத்தியில் புதியப் புதிய உணவுகளைத் தேடி உண்ணும் வழக்கம் அதிகரித்திருக்கிறது.

முன்பெல்லாம் தீணிப் பண்டாரம் எனச் சொன்னால் எல்லாருக்கும் மூக்கு மேல் கோபம் வரும். ஆனால் இப்போது தங்களைத் தாங்களே ’நான் ஒரு foodie ப்ரோ’ என சொல்லிக் கொண்டு பெருமிதம் அடைகிறார்கள். இவ்வாறு உணவு ஆரோக்கியம் சார்ந்தது மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு சார்ந்த விஷயமாகவும் மாறிவிட்டது.

இது ஒருபுறம் இருக்க, உணவு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம் என்கிறது அறிவியல் ஆய்வு.

மனம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நம் உடலில் சுரக்கும் சிலவகை  ஹார்மோன்களே காரணம். அவை டோபமைன் (Dopamine), ஆக்சிடோசின் (oxytocin), எண்டோர்பின் (endorphin) மற்றும் செரட்டோனின் (Serotonin) ஆகும். இவை ஆங்கிலத்தில் 'ஹேப்பி ஹார்மோன்' என அழைக்கப்படுகிறது. காரணம், இவை தாம் நம் மன மகிழ்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானவை. இயற்கையாகவே நம் உடலில் சுரக்கக் கூடியவை.

டோபமைன் என்ற ஹார்மோன் புதிதாக எதையேனும் கற்றுக் கொள்ளும் பொழுதும் மற்றும் மசாஜ் போன்ற சுகமான அனுபவங்களைப் பெறும் பொழுதும் இந்த டோபமைன் உற்பத்தியாகின்றது. இந்த ஹார்மோனை சிலர் போதைப் பொருட்களின் மூலம் தவறான வழிகளில் உடலில் சுரக்கச் செய்கின்றனர்.

ஆக்சிடோசின் என்பது ’லவ் ஹார்மோன்’ என்று கூறப்படுகிறது. இது ஒருவர் காதல் வயப்பட்டிருக்கும் போதும் யார் மீதேனும் அளவுகடந்த அன்பில் இருக்கும் போதும் நம் உடலில் அதிகமாகும். இதனால்தான் புதிதாக காதலில் விழுந்தோர் புத்துணர்வாக இருக்கின்றனர்.

Also see:

எண்டோர்ஃபின் இயற்கை வலி நிவாரணி எனக் கூறப்படுகிறது. ஏதேனும் செயல்களில் வெற்றி பெறும் போதும், உடலுறவின் போதும் இதன் அளவு உடலில் அதிகமாகின்றது. செரட்டோனின் நல்ல தூக்கத்திற்கும் கற்றுக்கொள்ளும் திறனுக்கும் மனதின் சமநிலைக்கும் மிகவும் அவசியம். மற்ற ஹார்மோன்களை விட செரட்டோனின் மனநலனில் பெரும் பங்கு வகிக்கிறது.

உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவை மனம் புத்துணர்வாக இருக்க அவசியம். அதைக்காட்டிலும் மனதிற்குப் பிடித்த உணவு உட்கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் செரட்டோனின் அளவு பிடித்தமான உணவை உட்கொள்ளும் போது அதிகரிக்கும். இதனால்தான் நமக்குப் பிடித்த உணவைக் கண்டவுடன் மனம் மகிழ்ச்சியடைகிறது.

சில உணவுகளில் இயற்கையாகவே இந்த செரட்டோனின் அளவை அதிகரிக்கும் தன்மை இருக்கின்றது. மீன், கோழி இறைச்சி, வெண்ணெய், பூசணி விதைகள், வேர்க்கடலை போன்றவை அவற்றுள் சில. காரமான உணவுகள் மூலம் என்டோர்பின் அளவை அதிகரிக்கலாம். பாதாம், பிஸ்தா, பட்டாணி, முட்டை போன்றவை டோபமைன் உற்பத்தியை அதிகமாக்கும். காதல் ஹார்மோனான ஆக்ஸிடோசினை உணவின் மூலம் பெற அன்போடு உணவை அடுத்தவர்களுக்கு வழங்குங்கள்.

உணவு வெறும் உடல் ஆரோக்கியம் சார்ந்தது மட்டுமல்ல மனம் சார்ந்ததும்தான். அதனால்தான் ஆட்டிஸம் பாதித்த அல்லது ஹைப்பர்ஆக்ட்டிவ் குழந்தைகளுக்கு மருந்துகளைக் காட்டிலும் சில உணவு வகைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நாம் எதை உண்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம். நல்லதைச் சாப்பிட்டு நலமுடன் இருப்போம்.

- வீரச்செல்வி மதியழகன்
Published by:Rizwan
First published:

Tags: Mental Health, Psychology

அடுத்த செய்தி