ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் நீங்கள் பின்பற்ற வேண்டிய டயட் டிப்ஸ் இதுதான்..!

குளிர்காலத்தில் நீங்கள் பின்பற்ற வேண்டிய டயட் டிப்ஸ் இதுதான்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சமீபத்தில் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜூதா திவேகர் தனது இன்ஸ்டா பக்கத்தில், குளிர்காலத்தில் உங்கள் உணவில் நீங்கள் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவு முறைகள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குளிர்காலம் வந்தாலே என்னடா? சூடாக சமைத்து சாப்பிடலாம் என்று நினைக்கும் பழக்கம் அனைவருக்கும் உண்டு. மேலும் பருவ காலங்களில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் அதிகளவில் ஏற்படுவதால் இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் பலர் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை அதிகளவில் உட்கொள்கின்றனர். இதற்கென அனைத்து உணவுப்பொருள்களையும் நீங்கள் உங்களது உணவுமுறையில் பின்பற்றலாம் என நினைத்தால் நிச்சயம் முடியாது.

ஆம் குளிர்காலத்தில் பொதுவாக நிலவும் வளர்சிதை மாற்றம் காரணமாக நமது உடலில் வெப்பநிலை உயர்வதால், உணவு செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும். இதோடு முடி உதிர்தல், வறண்ட சருமம், அஜீரணம், வாய்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கிறது. எனவே அதற்கு தகுந்தாற்போல் நம்முடைய உணவு பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Read More : பிளென்டர்களை சுத்தம் செய்வது ரொம்ப ஈசி..! இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

இதுக்குறித்து சமீபத்தில் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜூதா திவேகர் தனது இன்ஸ்டா பக்கத்தில், குளிர்காலத்தில் உங்கள் உணவில் நீங்கள் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவு முறைகள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கோந்த் கதிரா, பச்சை பூண்டு, டர்னிப் போன்றவை நிச்சயம் உணவுமுறைகள் இருக்க வேண்டும் எனவும் இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

குளிர்காலத்தில் நிச்சயம் பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள்..

கோந்த் : கோந்த் (goond) எனப்படுவது உண்ணக்கூடிய பசை என்று அழைக்கப்படுகிறது. மரத்திலிருந்து கிடைக்கப்பெறும் ஒருவகையான பசை போன்ற இது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் முதல் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவியாக உள்ளது. 
பூண்டு : ஹெரா லெசுன் என்றழைக்கப்படும் பூண்டு தற்போது சமையலில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நமது சருமத்தைப் பாதுகாப்பதாக வைப்பதோடு, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. எனவே குளிர்காலங்களில் தினமும் உங்களது உணவில் பூண்டு அதிகளவில் சாப்பிடும் போது, சளி, காய்ச்சல், வயிற்றுப்பிரச்சனை மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
டர்னிப் : டர்னிப் என்பது கிழங்கு வகைகயைச் சேர்ந்ததாகும். வெள்ளை நிறத்தில் ஊதா கலந்து இருக்கக்கூடிய இந்த காய்கறியில், கொழுப்பு, புரதம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து,வைட்டமின்கள் ஏ, பி, சி, கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உறுதுணையாக உள்ளது.
டர்னிப் குளிர்கால நன்மைகள் :  இதை சாறாக செய்து தேன் கலந்து சாப்பிடும் போது, இரைப்பைப் புண் குணமாகும், உடல் எடையை குறைக்கும், செரிமானப் பிரச்சனைக்கு தீர்வு காணும். எனவே குளிர்காலம் அல்லது மழைக்காலங்களில் இதை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்.
இதர உணவுகள் : நெல்லிக்காய், பீட்ரூட், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மேலும் சில நன்மைகள் : சளி, இருமல் , காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Food, Recipe, Winter