ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நன்மைகள் தரும் பாலிஃபெனான்ஸ்.. அதென்ன பாலிஃபெனால்ஸ்? எந்தெந்த உணவில் கிடைக்கிறது.?

நன்மைகள் தரும் பாலிஃபெனான்ஸ்.. அதென்ன பாலிஃபெனால்ஸ்? எந்தெந்த உணவில் கிடைக்கிறது.?

பாலிஃபெனால்ஸ்

பாலிஃபெனால்ஸ்

பாலிஃபெனால்ஸ் முக்கியமாக பச்சை காய்கறிகள், பழ வகைகள், மூலிகைகள், மசாலாக்கள், தேனீர், டார்க் சாக்லேட் ஆகியவற்றில் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக என்னென்னவோ செய்து வருகின்றனர். மேலும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க விதவிதமான வழிகள் தற்போது இருக்கின்றன. உடலை ஆரோக்கியமாக்குவதற்கு சில குறிப்பிட்ட பழக்கங்களை நாம் கடைப்பிடித்து வருவது போல, அதே உடலின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சில குறிப்பிட்ட செயல்களை செய்யாமலும் இருக்க வேண்டும். முக்கியமாக ஒரு மனிதனின் செரிமானப்பாதை சரியாக ஆரோக்கியத்துடன் இயங்கினால் தான் நாம் உட்கொள்ளும் உணவின் உள்ள அனைத்து சத்துக்களும் முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.

  இதைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூர் கூறுகையில், பாலிஃபெனால்ஸ் என்னும் ஒரு வகை ஆன்டிஆக்சிடென்ட்ஸ் செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் செரிமானத்திற்கு உதவும் மைக்ரோபையோம் எனப்படும் உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளுக்கு உணவாக இந்த பாலிஃபெனால்ஸ் விளங்குகின்றன என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிஃபெனால்ஸ் பற்றி பதிவிட்டுள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Bhakti Kapoor (@gethealthyhigh)  பாலிஃபெனால்ஸ் அதிகம் உள்ள தாவர வகைகளை உட்கொள்ளும் போது, அவை செரிமானத் திறனை அதிகப்படுத்துவதோடு மூளை ஆரோக்கியமாக இயங்குவதற்கும் வழி செய்கிறது என்றும், இதய கோளாறுகள் மற்றும் டைப் 2 டயாபடீஸ் ஆகியவை ஏற்படுவதில் இருந்தும் பாதுகாக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் சில வகை புற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் இவை குறைப்பதாக தெரிவித்துள்ளார்.

  செரிமான பகுதியில் முக்கிய பங்காற்றும் பாலிஃபெனால்ஸ்(poly phenols) மற்றும் கட் மைக்ரோ பையோம்(Gut microbiome) ஆகிய நுண்ணுயிரிகளைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் பாலிஃபெனால்ஸ் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது, செரிமான திறனை அதிகப்படுத்தியும் உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது என்று தெரியவந்துள்ளது.

  பாலிஃபெனால்ஸ் முக்கியமாக பச்சை காய்கறிகள், பழ வகைகள், மூலிகைகள், மசாலாக்கள், தேனீர், டார்க் சாக்லேட் ஆகியவற்றில் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  பாலி ஃபெனால்ஸ் இயற்கையாகவே ஆன்டிஆக்சிடென்ட்களாக செயல்படும் தன்மை உடையவை. மேலும் புற்றுநோய், நீரிழிவு நோய், இதய கோளாறுகள் ஆகியவை ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாப்பதாகவும் கபூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். இவை மிக வலிமையான ஆன்ட்டி ஆக்சிடென்ஸாக செயல்படுவதால் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுவதோடு, உடலுக்கு கெடுதல் தரக்கூடிய கொழுப்புகளின் அளவை கட்டுப்படுத்தவும், குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சனை ஏற்படாமலும் நம்மை பாதுகாக்கிறது. மேலும் உடலில் ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கிறது.

  ஊட்டச்சத்து நிபுணர் ரீமா கிஞ்சள்கர் “இந்த பாலிஃபெனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இது மட்டுமின்றி உடலில் இன்சுலினின் உணர்திறனை அதிகபடுத்துவதையும் செய்வதால் டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது" என்று கூறியுள்ளார்!

  பாலிஃபெனால்ஸினால் கிடைக்கும் நன்மைகள்:

  • அழற்சியைக் குறைக்க உதவுகிறது
  • ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸுகு எதிராக போராட உதவுகிறது.
  • வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு உணவாக அமைகிறது.
  • மூளையின் செயல் திறனை மேம்படுத்துவதோடு அறிவாற்றலையும் அதிகரிக்கிறது
  • ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது
  • வயிற்றின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
  • புற்று நோய்க்கு எதிராக போராட உதவுகிறது
  • இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

  Also Read : இந்த 5 விதைகள் போதும் - ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்!

  பழ வகைகளை எடுத்துக் கொண்டால் ஆப்பிள், திராட்சை, மாதுளை, ஸ்ட்ராபெரி ஆகியவற்றில் பாலி ஃபெனால்ஸ் அதிகமாக உள்ளன. காய்கறிகளை பொறுத்தவரையில் கேரட், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றை பாலி ஃபெனால்ஸ் அதிகமாக உள்ளன. பாதாம், வால்நட்ஸ், ஆளி விதைகள் போன்ற பருப்பு வகைகளிலும் இவை அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  Published by:Josephine Aarthy
  First published:

  Tags: Blood, Diabetes, Healthy Food, Pomegranate