முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மழைக்காலத்தில் சீக்கிரமே கெட்டுப்போகும் ஊறுகாய்... எப்படி சேமித்து வைப்பது..? டிப்ஸ் இதோ..

மழைக்காலத்தில் சீக்கிரமே கெட்டுப்போகும் ஊறுகாய்... எப்படி சேமித்து வைப்பது..? டிப்ஸ் இதோ..

ஊறுகாய்

ஊறுகாய்

மழைக்காலத்தில் ஊறுகாய் போன்ற உணவுப்பொருட்களை சேமித்து வைக்க கண்ணாடி பாட்டில்கள் ஏற்றவை. ஏனெனில் பிளாஸ்டிக் டப்பாக்கள் அல்லது கொள்கலன்களில் ஊறுகாயை சேமித்து வைக்கும் போது அவை விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மழைக்காலத்தில் உணவுப்பொருட்களை சேமிப்பது வைப்பது என்பது மிகவும் சிக்கலானது. மழைக்காலத்தில் காற்றில் அதிக ஈரம் மற்றும் ஈரப்பதம் அடிக்கடி உணவு பொருட்களை கெட்டுவிடும். குறிப்பாக கோடை காலத்தில் மிகவும் கவனம் எடுத்து தயாரிக்கப்படும் ஊறுகாய் வகைகள், மழை காலத்தில் ஏற்படும் அதிகபட்ச ஈரப்பதம் காரணமாக விரைவிலேயே கெட்டுப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக ஊறுகாய்கள் வருடக்கணக்கில் சேமித்து வைக்கக்கூடிய உணவுப்பொருள் என்றாலும், மழைக்காலத்திடம் இருந்து அவற்றை பாதுகாப்பாக வைப்பது என்பது மிகப்பெரிய சவாலாகும்.

ஊறுகாயின் ஆயுளை அதிகரிக்க உதவும் சில எளிய குறிப்புகள் இதோ...

1. கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துங்கள்:

மழைக்காலத்தில் ஊறுகாய் போன்ற உணவுப்பொருட்களை சேமித்து வைக்க கண்ணாடி பாட்டில்கள் ஏற்றவை. ஏனெனில் பிளாஸ்டிக் டப்பாக்கள் அல்லது கொள்கலன்களில் ஊறுகாயை சேமித்து வைக்கும் போது அவை விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. உணவுப் பொருட்களின் அடுக்கு ஆயுளை அதிகரிக்க, அவற்றை இறுக்கமாக நிரம்பிய கொள்கலன்களில் சேமித்து வைப்பது அவசியம். நீங்கள் சூரிய ஒளியில் கொள்கலனை வைத்திருந்தாலும், கண்ணாடி ஜாடிகளில் சேமித்து வைக்கும்போது காற்றில் உள்ள ஈரப்பதம் ஊறுகாயை பாதிக்காது. கண்ணாடி கொள்கலனின் வெளிப்புற அடுக்கு சூரிய ஒளியால் வெப்பமடைகிறது, அது ஈரப்பதத்தை உள்ளே அனுமதிக்காது. இது ஊறுகாயைப் பாதுகாக்க உதவுகிறது.

2. எண்ணெய் மற்றும் உப்பு கலவை:

உடல் நலனைக் கருத்தில் கொண்டு பலரும் வீட்டில் ஊறுகாய் தயாரிக்கும் போது, குறைவான அளவிலான எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். இது சாதாரண நாட்களில் உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தாலும், ஊறுகாயின் ஆயுட்காலத்தை குறைய வைக்கிறது. குறிப்பாக மழைக்காலத்திற்கு முன்னதாக தயாரிக்கப்படும் ஊறுகாய்களில் உப்பு மற்றும் எண்ணெய்யின் அளவை சற்றே கூடுதலாக சேர்க்க வேண்டும். உப்பு மற்றும் எண்ணெய் கலவையானது ஊறுகாயை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் இயற்கைப் பாதுகாப்புப் பொருளாக செயல்படுகிறது.

மழை காலங்களில் வீட்டில் உள்ள தானியங்களை பாதுகாப்பது எப்படி - எளிமையான டிப்ஸ்

எனவே, மழைக்கால ஈரபதத்தில் இருந்து உங்கள் ஊறுகாயை காக்க விரும்பினால், தயாரிப்பின் போது கூடுதல் உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்க மறக்காதீர்கள்.

3. ஈரமான இடங்களை தவிருங்கள்:

என்ன தான் கண்ணாடி பாட்டிலில் சரியாக மூடிவைத்தாலும், சில சமயங்களில் ஊறுகாய் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் ஊறுகாயை ஈரமான அல்லது ஈரப்பதம் அதிகமுள்ள இடத்தில் சேமித்து வைப்பது ஆகும். சமையலறை ஷெல்பில் ஊறுகாய் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்றால், அதனை உலர்வான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

வீட்டில் எந்த பொரியல் செய்தாலும் அதன் மேல் இந்த பொடியை தூவி செய்து பாருங்கள்... எதுவும் மிஞ்சாது..!

சேமிப்பு முறைகளில் மட்டும் ஊறுகாய் பாட்டிலை பயன்படுத்துவதிலும் அதிக கவனம் தேவை. ஊறுகாய் ஜாடிக்குள் ஸ்பூனை போட்டு வைத்து, அதனை திரும்ப திரும்ப எடுப்பது, ஈரமான கைகளில் ஊறுகாய் ஜாடியை கையாள்வது போன்றவற்றை தவிர்ப்பதும், அதன் ஆயுளை அதிகரிக்க உதவும்.

குறிப்பு: இந்தக் கட்டுரையில் பகிரப்படும் உடல்நலக் குறிப்புகள் பொதுவான நடைமுறைகள் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. வாசகர்கள் வீட்டில் அவற்றைப் பின்பற்றும் முன் நிபுணர்கள் ஆலோசனையை பெறுவது அறிவுறுத்தப்படுகிறது.

First published:

Tags: Kitchen Hacks, Monsoon, Pickle