Home /News /lifestyle /

Recipe | கொள்ளு குழம்பு செய்வதற்கான ரெசிபி

Recipe | கொள்ளு குழம்பு செய்வதற்கான ரெசிபி

கொள்ளு குழம்பு

கொள்ளு குழம்பு

hourse gram | ஒரே ஒரு டேபிள் ஸ்பூன் கொள்ளுவில் உடலுக்குத் தேவையான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்து, புரதச்சத்து , விட்டமின்கள், மினரல்கள் நிறைவாக இருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் 2 லிருந்து 3 நாட்கள்  உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கொள்ளை சுண்டல் செய்து சாப்பிடுவார்கள். கொள்ளு ரசம் வைத்து சாப்பிடுவார்கள். அத்துடன் கொள்ளு குழம்பும் வைப்பர்கள். அதனை எப்படி வைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்

    கொள்ளு - 200 கிராம்,

    பெரிய வெங்காயம் - 200 கிராம்,

    தக்காளி - 200 கிராம்,

    பச்சைமிளகாய் - 5,

    இஞ்சி - 25 கிராம்,

    பூண்டு - 25 கிராம்,

    கடுகு - 15 கிராம்,

    மிளகு - 15 கிராம்,

    சீரகம் - 15 கிராம்,

    சின்ன வெங்காயம் - 100 கிராம்,

    காய்ந்தமிளகாய் - 5,

    மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்,

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

    தனியா தூள் - 1 டீஸ்பூன்,

    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,

    புளி - 50 கிராம்,

    நல்லெண்ணெய் - 200 மி.லி.,

    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது,

    உப்பு - தேவையான அளவு.

    கொள்ளு


    செய்முறை

    முதலில் கொள்ளை நன்கு சுத்தம் செய்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து, குக்கரில் வேக வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து, சின்ன வெங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    மேலும் படிக்க... கொள்ளு பொடி செய்முறை!

    பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு, வெந்த கொள்ளு, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழை போட்டு இறக்க்கினால் கொள்ளு குழம்பு ரெடி...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Millets Food

    அடுத்த செய்தி