உணவை தவிர்க்காமல் உடல் எடையை குறைக்க பின்பற்ற வேண்டியவை!

உணவை தவிர்க்காமல் உடல் எடையை குறைக்க பின்பற்ற வேண்டியவை!

மாதிரி படம்

தினமும் நிறைய தண்ணீரை குடிக்க கற்றுக்கொள்ளுங்கள். அதிகப்படியான காபி, கோக்-கோலாஸ், குளிர் பானங்கள் ஆகியவற்றைத் தவிருங்கள். அதற்கு பதிலாக தேங்காய் நீர், பழச்சாறு அல்லது மூலிகை டீயை குடிக்கவும். இப்படி செய்வதால் உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்கலாம், நீரிழிவு, மலச்சிக்கல், உடல் பருமன் போன்ற பல நோய்களுக்கு ஆளாகாமல் வாழலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உடல் எடையை குறைக்க உணவைத் தவிர்ப்பது முக்கியம் என்பது பிரபலமான கட்டுக்கதை. உண்மையில், உணவைத் தவிர்ப்பது உங்களுக்கு செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும். மேலும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கும் உடல் எடை குறைப்பதை உறுதி செய்வதற்கும் ஒரு முழுமையான உணவு மற்றும் சீரான வாழ்க்கை முறை இன்றியமையாதவை. சுறுசுறுப்பாக இருக்கவும், குண்டாக இருக்கும் உடலை குறைக்கவும் சில சிறந்த வழிகள் உள்ளன. ஊட்டச்சத்து அடர்த்தியான, சீரான உணவுத் திட்டத்தையும் சரியான உடற்பயிற்சியையும் இருந்தாலே போதும். சரி வாருங்கள் பின்வரும் வழிமுறைகளை கொஞ்சம் அலசுவோம்.  

உணவை தவிர்க்காமல் உடல் எடையை குறைக்க/கட்டுக்குள் வைக்க இதோ சிறந்த வழிகள்:

சீரான உணவு திட்டம்:

சரியான நேரத்தில் பிரெஷ்ஷான சாப்பாட்டை சாப்பிடுவது எப்போதும் உடல் எடையில் சில அற்புதங்களைச் செய்கிறது. எனவே, தீங்குதரும் அதிக எண்ணெய், செயற்கை பொருட்களால் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. முதலில் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள், பரோட்டா, பாணி பூரி, நூடுல்ஸ் போன்ற உணவுகளை தூக்கி தூரம் வைத்துவிட்டு அதிகளவு பழங்களை சாப்பிடுங்கள்.  

புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது புரதங்கள் உடல் எடை இழப்பை தூண்டும். உதாரணமாக, அரிசி-பயறு, கோழி-காய்கறிகளும்; பழம்-தயிர்; முட்டை-முழு தானிய ரொட்டி போன்ற காம்பினேஷன்களை ட்ரை செய்வது நல்ல பலனை தரும்.

மாலைக்கு பின் ஹெவி மீல்ஸ் வேண்டாமே:

குறைந்தது இரவு 7 மணிக்கு முன்னரே சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். உங்கள் உடல் கடிகாரத்தை இயற்கையின் கடிகாரத்துடன் இணைத்து உடலை பதமாக பார்த்துக்கொள்ளுங்கள். பொதுவாக நம் உடலின் ஜீரண மணடலம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஸ்லோவாகிவிடும். இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை சாப்பிடாமால் இருப்பவர்களின் உடல் எடை குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சின்ன சின்ன உடற்பயிற்சி பிளான்கள்:

தினமும் நீண்ட நேரம் நடக்கவேண்டும் என்பதை கட்டாயமாக்குங்கள்.  குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சியை செய்யலாம். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் உட்கார வேண்டாம். ஒரு சிறிய இடைவெளி எடுத்து, உங்கள் கை கால்களை நீட்டி மடக்குங்கள். இப்போது ஒர்க் ப்ரம் ஹோமில் பலரும் ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை செய்வார்கள். அதனால் பின்னாளில் சிக்கல்கள் ஏற்பட்டு அவதி பட வேண்டி வரும். இப்போதே சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்தால் சிக்கலின்றி வாழலாம்.

காபி, இனிப்பு பானங்களை குறைக்கவும்:

தினமும் நிறைய தண்ணீரை குடிக்க கற்றுக்கொள்ளுங்கள். அதிகப்படியான காபி, கோக்-கோலாஸ், குளிர் பானங்கள் ஆகியவற்றைத் தவிருங்கள். அதற்கு பதிலாக தேங்காய் நீர், பழச்சாறு அல்லது மூலிகை டீயை குடிக்கவும். இப்படி செய்வதால் உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்கலாம், நீரிழிவு, மலச்சிக்கல், உடல் பருமன் போன்ற பல நோய்களுக்கு ஆளாகாமல் வாழலாம்.

Also read... கேன்சர் இருக்கிறதா? ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு மாறுங்கள்...

நல்ல தூக்கத்தை பெறுங்கள்: 

மன அழுத்தத்திலிருந்து மீள உங்கள் உடலுக்கு தேவையான நேரத்தை வழங்குதல் மிகவும் முக்கியம். சராசரி நேரத்தை விட தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம். மன அழுத்தத்தை குறைக்க ஆல்கஹால் உட்கொள்வது, புகை பிடித்தல் போன்றவற்றை செய்தால் உங்கள் உடல் ஹார்மோன்கள் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டு பின்னர் உங்களை மருத்துவமனையில் சேர்த்துவிடும். 

மேற்சொன்னவற்றை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றினால் நிச்சயம் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும். இப்போதெல்லாம் பிறக்கும் குழந்தைக்கு பல நோய்கள் வருகிறது. ஆகையால் நம் உடலை நாம் தான் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் அதற்கு மேற்சொன்னவற்றை பின்பற்றினாலே  போதும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: