ஜன்னலின் ஓரம் உட்கார்ந்து, மழையின் சத்தம், மண்ணின் வாசனை, குளிர்ந்த மற்றும் வசதியான சூழல், கோடைகாலத்தின் கடுமையான வெப்பத்திற்குப் பிறகு அமைதியான இதுபோன்ற ஒரு ‘வானவில் வாழ்க்கை’ பலருக்கு குழந்தை பருவ நினைவுகளை ஏற்படுத்தும்.
மழை என்பது, ஆண்டின் சிறந்த நேரமாக தோன்றினாலும், நாம் நோய்வாய்ப்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, இவற்றில் கவனம் செலுத்துங்கள்.
சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது:
சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி-யின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது. ஆனால், இந்த பழங்களின் புளிப்பு காரணமாக, மழைக்காலத்தில் அவற்றைத் தவிர்க்கிறார்கள். இதனால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கும்.
Must Read | இந்த 3 பொருட்கள் போதும்… உடல் எடையை விறுவிறுவென குறைக்க உதவும் கற்றாழை ஜூஸ் ரெடி!
ப்ரீபயாடிக் மற்றும் புரோபயாடிக் உணவுகளைத் தவிருங்கள்:
சிட்ரஸ் பழங்களைப் போலவே, மக்கள் தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகளைத் தவிர்க்கிறார்கள். மழைக்காலங்களில், குடலுக்கு மகிழ்ச்சியூட்டும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கவனித்துக் கொள்ளும் உணவை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தயிர், மோர், ஊறுகாய், காய்கறிகள் போன்ற உணவுகள் குடலை நோயை எதிர்க்கும் கிருமிகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
மேலும், குளிர்ந்த நீர் உங்கள் தொண்டைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் தொற்றுநோய்களுக்கு ஆளாக்குகிறது.
Must Read | உடல் எடையைக் குறைக்க தினமும் செய்யவேண்டிய மூன்று விதமான சிம்பிள் வொர்க் அவுட்ஸ்!
பருவகால உணவுகளை புறக்கணித்தல்:
ஹைப்பர்லோகல் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளின் நுகர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு காரணம், உங்கள் பகுதியில் வளர்க்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் பருவகாலமாக இருக்கும்போது மட்டுமே அதிக நன்மைகளை தரும்.
இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் செயற்கையாக தயாரிக்கப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நன்மைகளை அவை தராது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தள்ளுவண்டி கடைகளை அதிகம் நாடுவது:
மழைகாலங்கள் என்பது டீயுடன் பகோடா போன்ற வறுத்த பண்டங்களுக்கு அழைப்பு விடும். வறுத்த உணவுகள் வீக்கம் மற்றும் வயிற்று உபாதையை ஏற்படுத்தும். பருவமழையின் போது, தாகம் ஏற்படாது, அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிப்பதைத் அவை தடுக்கின்றன. எனவே, எண்ணெய்யில் வறுத்த தின்பண்டங்களை தவிர்த்துவிட்டு, தினமும் 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Monsoon, Nutrition, Nutrition food