• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • உடல் எடை குறைத்தல், பிசிஓடி , நீரிழிவு நோயாளிகளுக்கு கைக்கொடுக்கும் 'கீட்டோ கடை' : தரத்திலும்.. ஊட்டசத்திலும் சமரசமில்லை

உடல் எடை குறைத்தல், பிசிஓடி , நீரிழிவு நோயாளிகளுக்கு கைக்கொடுக்கும் 'கீட்டோ கடை' : தரத்திலும்.. ஊட்டசத்திலும் சமரசமில்லை

கீட்டோ கடை

கீட்டோ கடை

கீட்டோ கடையில் பதிவு செய்துவிட்டால் போதும் மூன்று வேளையும் உணவு தானாக வீடு தேடி வரும். உடல் எடையை குறைப்பது பற்றி கவலைப்படத் தேவையில்லை.

 • Share this:
  வீட்டில் டயட் இருப்பவர்களின் நிலை கொஞ்சம் மோசமானதுதான். ஏனெனில் வீட்டில் அனைவருக்கும் ஒரே உணவாக சமைக்கும்போது இவர்களுக்கு மட்டும் தனியாக சமைக்க வேண்டும். இதனால் சில நேரங்களில் தாங்களே தங்கள் உணவை சமைத்து சாப்பிடும் நிலை வரும். சிலர் சமைக்காமல் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என சிந்திப்பார்கள். சிலர் பழங்களை சாப்பிட்டு வயிற்றை நிரப்புவார்கள். இதனால் ஊட்டச்சத்து குறைபாடுதான் அதிகரிக்கும். பின் உடல் பலவீனமாகி மீண்டும் டயட்டை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

  ஆனால் இதையெல்லாம் மாற்றும் விதமாக உங்கள் டயட்டில் சற்றும் சமரசமில்லாத வகையில் ரெஸ்டாரண்ட் சுவையில் அதுவும் கலர்ஃபுல்லாக , வகை வகையாக சமைத்துக்கொடுத்தால் எப்படி இருக்கும்..? நிச்சயம் பலருக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கும். அப்படி உங்கள் எண்ணங்களை நிஜமாக்குவதுதான் ’கீட்டோ கடை’.

  கீட்டோ கடை கார்த்திக் ராஜா மற்றும் முகமத் ஆகிய இருவரால் சென்னையில் தொடங்கப்பட்டது. கார்த்திக் தோல் மருத்துவராகவும் முகமத் பொதுநல மருத்துவராகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாறிவரும் காலச்சூழலில் இந்த முயற்சி மிகப்பெரும் மாற்றத்திற்கான அடித்தளம் என்றே சொல்லலாம். பெருகிவரும் தரமற்ற உணவுக் கலாச்சாரம் ஒரு கட்டத்தில் இதுபோன்ற ஹெல்தியான அதேசமயம் உடலுக்கு தீங்கு இல்லா.. தேவையற்ற கொழுப்பை சேர்க்காத உணவுகளை நாடும் என்பதில் ஐயமில்லை.

  கீட்டோ டயட் பலரும் அறிந்திருக்கக் கூடும். சமீப நாட்களாக உடல் எடையைக் குறைக்க பலரும் பின்பற்றும் டயட் கீட்டோதான். கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதுதான் இந்த டயட்டின் ஸ்பெஷல். இது பேலியோ டயட்டை தழுவி வரையறுக்கப்பட்டது.  கீட்டோ டயட் எந்த அளவு மக்கள் மத்தியில் வரவேற்பை கொண்டுள்ளதோ அதேசமயம் சில எதிர்ப்புகளையும் கொண்டுள்ளது. அதாவது இது சில பக்கவிளைவுகளை உண்டாக்குகிறது என்பதுதான் அந்த எதிர்ப்பு.

  இதைப்பற்றி கார்த்திக் ராஜாவிடம் கேட்டபோது “ நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் அதை முறையாக பின்பற்றாத பட்சத்தில்தான் இதுபோன்ற பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். அனைவரும் கீட்டோ எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவரவர் உடல் நிலைகளைப் பொருத்தே கீட்டோ டயட்டை வடிவமைக்க வேண்டும். யாருடைய வழிகாட்டுதலுமின்றி தானாக டயட் இருக்க முயற்சித்தாலோ அல்லது முறையாக பின்பற்றவில்லை என்றாலோ கீட்டோ டயட் மட்டுமல்ல எந்த டயட்-ஆக இருந்தாலும் பக்கவிளைவுகள் வரும்” என்கிறார்.

  கீட்டோ கடையின் ஸ்பெஷாலிட்டியும் அதுதான். அதாவது இவர்கள் மருத்துவர்கள் என்பதால் இவர்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களின் உடல்நலப் பிரச்னைகளை பரிசோதனை செய்கின்றனர். அவர்களுடைய சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவை கண்கானிக்கப்பட்டு அதற்கு ஏற்ப அவர்களுடைய டயட் பட்டியலை அமைக்கின்றனர். பின் அதன்படி அவர்களுக்கு உணவு சமைத்து வீட்டிற்கே அனுப்புகின்றனர்.  குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளே இல்லாமல் இவர்களுடைய கீட்டோ கடை உணவுகள் மூலமாகவே அவர்களின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதாக தெரிவிக்கிறார் 10 வருடம் மருத்துவத்துறையில் இருக்கும் கார்த்திக். சென்னையில் இதுவரை இவர்களுக்கு 150 -க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னையில் மட்டும்தான் இவர்களுடைய டெலிவரி சேவை இயங்கி வருகிறது.

  ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உங்கள் உணவுப்பழத்தை எவ்வாறு மாற்றலாம்..?

  நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமன்றி பிசிஓடி இருக்கும் பெண்களுக்கும் கிட்டோ கடை கைக்கொடுக்கிறது. அவர்களுக்கு ஏற்றவாறும் உணவு முறைகளை வரையறுத்து மருந்து மாத்திரைகளின்றி உணவின் மூலமாகவே அவர்களின் பிரச்னையை சரி செய்வதாக கூறுகிறார் கார்த்திக். சருமப் பிரச்னைகளுக்குக் கூட கீட்டோ கடையை அனுகலாம் என்பது கூடுதல் தகவல்.  இவர்களின் மெனுவில் அரிசி உணவு, ரொட்டி போன்ற நாம் வீட்டில் அன்றாடம் சாப்பிடும் உணவை பார்க்க முடியாது. அரிசி மாவு, மைதா, கோதுமை மாவுக்கு மாற்றாக பாதாம் மாவு தான் பயன்படுத்துகின்றனர். இப்படி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவின் தரத்திலும் , சுவையிலும் கொஞ்சமும் சமரசம் செய்யாமல் உணவை டெலிவரி செய்கின்றனர். கிட்டத்தட்ட 50 வகையான உணவுகளை கீட்டோ கடை கொண்டுள்ளது. குறிப்பாக மட்டன் சுக்கா, முட்டை, பனீர் , ஆம்லெட் இப்படி நாவூறும் ருசியில் கிடைக்கின்றன என்பதே கீட்டோ கடையில் பிளஸ்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எனவே நீங்கள் சென்னையில் இருந்தால் கீட்டோ கடையில் பதிவு செய்துவிட்டால் போதும் மூன்று வேளையும் உணவு தானாக வீடு தேடி வரும். இவர்கள் கொடுக்கும் உணவை சரியாக சாப்பிட்டு, அதோடு சில உடற்பயிற்சிகளும் மேற்கொண்டு ஆக்டிவாக இருந்தால் உடல் எடை குறைப்பது நிச்சயம் என்கிறார் கார்த்தி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sivaranjani E
  First published: