ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மசாலா மீன் வறுவல் இனிமேல் இப்படி செஞ்சு பாருங்கள்...

மசாலா மீன் வறுவல் இனிமேல் இப்படி செஞ்சு பாருங்கள்...

அசைவ உணவுப் பட்டியலில் உள்ள கோழி, ஆடு, நண்டு, மீன் ஆகியவற்றில் ஆரோக்கியத்தில் முதல் இடம் பிடிப்பது மீன். மீனில் கொழுப்புச் சத்தை விட புரதச் சத்துகள் மிகுந்துள்ளன. மீனில் ஒமோகா-3 என்ற ஒரு வகை அமிலம் உள்ளது. இதில் வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக மீன் வறுவல் சாப்பிடாமல் இருக்கமாட்டார்கள். மீன் வறுவல் ஒரு சுவையான உணவு ஆகும். மீனிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மீன் வறுவல் என்பது பலரின் விருப்பமாக‌ உள்ளது. 

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் தேவையான எண்ணிக்கையில்

இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி

சிறிய வெங்காயம் – 8

கருவேப்பிலை – சிறிதளவு

மல்லிதழை – சிறிதளவு

எலுமிச்சம்பழசாறு – 2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

சீரகத்தூள் – 1 தேக்கரண்டி

மல்லித்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி

மைதா – 4 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க

செய்முறை

வெங்காயம், கருவேப்பிலை, மல்லிதழை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழசாறு ,மிளகாய்த்தூள்,சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, அரைத்த மசாலா சேர்த்து திக்கான மசாலா செய்து கொள்ளவும். மீன் துண்டின் இரு புறங்களிலும் மசாலா கலவையை தடவி விடவும். அதன் மேலே மைதா மாவை தூவி 1 மணி மேரம் வரை ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் , மிதமான சூட்டில் மீனை இரு புறமும் பொரித்தெடுக்கவும்.

மேலும் படிக்க... வாழைக்காய் பொடிமாஸ் செய்ய ரெசிபி!

First published:

Tags: Fish, Food