ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மீன் வறுவலுக்கு மசாலாவை இப்படி மிக்ஸ் பண்ணுங்க... சுவை அப்படியே ஒட்டிக்கொள்ளும்..!

மீன் வறுவலுக்கு மசாலாவை இப்படி மிக்ஸ் பண்ணுங்க... சுவை அப்படியே ஒட்டிக்கொள்ளும்..!

மீன் வறுவல்

மீன் வறுவல்

அனைவரின் நா சுவையை தட்டி எழுப்பும் மீன் வறுவலை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். பிறகு அந்த சுவை நாவை விட்டு நீங்காது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுட சுட அதுவும் காரசாரமான மீன் வறுவலை கண் முன் வைத்தால் சைவப் பிரியர்களுக்குக் கூட சாப்பிட ஆசை தூண்டும். அப்படி அனைவரின் நா சுவையை தட்டி எழுப்பும் மீன் வறுவலை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். பிறகு அந்த சுவை நாவை விட்டு நீங்காது.

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் தேவையான எண்ணிக்கையில்

இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி

சிறிய வெங்காயம் – 8

கருவேப்பிலை – சிறிதளவு

மல்லிதழை – சிறிதளவு

எலுமிச்சம்பழசாறு – 2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

சீரகத்தூள் – 1 தேக்கரண்டி

மல்லித்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி

மைதா – 4 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க

செய்முறை

வெங்காயம், கருவேப்பிலை, மல்லிதழை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.

எலுமிச்சம்பழசாறு ,மிளகாய்த்தூள்,சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, அரைத்த மசாலா சேர்த்து திக்கான மசாலா செய்து கொள்ளவும்.

Also Read : பாலே இல்லாமல் பனீர் செய்ய தெரியுமா..? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ்..!

மீன் துண்டின் இரு புறங்களிலும் மசாலா கலவையை தடவி விடவும். அதன் மேலே மைதா மாவை தூவி 1 மணி மேரம் வரை ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் , மிதமான சூட்டில் மீனை இரு புறமும் பொரித்தெடுக்கவும்.

First published:

Tags: Fish Fry