Home /News /lifestyle /

மணமணக்கும் மீன் பிரியாணி... இனிமேல் இப்படி செஞ்சு பாருங்கள்...

மணமணக்கும் மீன் பிரியாணி... இனிமேல் இப்படி செஞ்சு பாருங்கள்...

ஓமேகா 3 என்ற ஒரு வகை ஆசிட் மீனில் உள்ளது. இந்த ஆசிட் உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் மீன் கொண்டு சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மட்டன் பிரியாணியை போலவே மீன் பிரியாணியை செஞ்சுருக்கீங்களா? வாங்க எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருட்கள்

மீன் - 1/4 கிலோ

அரிசி - 2 ஆழாக்கு

வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 150 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்

புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு

மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்

தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்

தயிர் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1/2 குழிக் கரண்டி

.

செய்முறை:

மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் சிறிது நேரத்தில் இறக்கவும்.
குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

மேலும் படிக்க... மீன் வறுவல் இனிமேல் இப்படி செஞ்சு பாருங்கள்...

 சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?
Published by:Vaijayanthi S
First published:

Tags: Biriyani, Fish, Food

அடுத்த செய்தி