ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மீன் பஜ்ஜி சாப்பிட்டிருக்கீங்களா..? இதோ ரெசிபி...

மீன் பஜ்ஜி சாப்பிட்டிருக்கீங்களா..? இதோ ரெசிபி...

மீன் பஜ்ஜி

மீன் பஜ்ஜி

Meen bajji | மீன் கொண்டு சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான பஜ்ஜி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பஜ்ஜி என்றாலே வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜிதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் சற்று வித்தியாசமாக மீனில் பஜ்ஜி செய்யலாம் தெரியுமா? அசைவ பிரியர்களுக்கும் மீன் உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கும் கண்டிப்பாக இந்த ரெசிபி பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:

முள் நீக்கிய மீன் - அரை கிலோ

மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி

சோள மாவு - ஒரு கை அளவு

மைதா மாவு - இரு கை அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை பழச் சாறு - தேவையான அளவு

செய்முறை:

1.  மைதா மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூள் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

2. மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

Also see... சமையலுக்கு தேவையான சில டிப்ஸ்...

3. ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

4. எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

5. இதோ இப்போது சுவையான மீன் பஜ்ஜி ரெடி.

First published:

Tags: Fish