• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஃபிங்கர் சிப்ஸ் செய்ய ரெசிபி!

ஃபிங்கர் சிப்ஸ் செய்ய ரெசிபி!

குழந்தைகளுக்கு பிடித்தமான ஃபிங்கர் சிப்ஸை கடைகளில் வாங்கி கொடுத்து இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஃபிங்கர் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • Share this:
    ஃபிங்கர் சிப்ஸ் பொதுவாக கடைகளில் மட்டுமே கிடைக்கும் ஒரு சிற்றுண்டியாக உள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து குழந்தைகளுமே இதை விரும்பி உண்ணுவார்கள். அத்தகைய சிப்ஸை நாம் வீட்டிலே செய்து கொடுத்தோமானால் எப்படி இருக்கும். வாங்க அதன் ரெசிபியை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

    எலுமிச்சம் பழம் - 1/2 மூடி

    உப்பு - சுவைக்கு

    எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    உருளைகிழங்கை பெரிய சைஸில் தேர்ந்தெடுக்கவும். அதன்பின்னர் தோல் அகற்றி பிங்கர் சிப்ஸ் கட்டரில் நீள, நீளமாக நறுக்கவும். அல்லது சாப்பிங் போர்டில் கிழங்கை வைத்து முதலில் போதுமான அளவு திக்னெஸ்சில் வட்டம், வட்டமாக நறுக்கவும். பின்னர், குறுக்காக நீளமாக நறுக்கவும். இப்பொழுது அழகிய வடிவில் ஃபிங்கர் சிப்ஸ் கிடைக்கும்.

    அதன் பின்னர் நீரை கொதிக்க வைத்து எலுமிச்சம் பழத்தை பிழிந்து, கூடவே உப்பு சேர்த்து நறுக்கிய கிழங்கை போட்டு அடுப்பை அணைத்து விடவும். ஐந்து நிமிடம் அப்படியே வைத்து இருந்து பின் நீரை வடிகட்டி, ஒரு வெள்ளை துணியில் கிழங்கை உலர்த்தவும். நன்கு உலர்ந்ததும் எண்ணெயில் கரகரப்பாக பொரித்து எடுக்கவும்.ஃபிங்கர் சிப்ஸ் ரெடி...

    மேலும் படிக்க... கொத்துக்கறி புலாவ் எப்படி செய்வது?

    மேலும் படிக்க... உடற்பயிற்சி செய்வதற்கு இதுதான் சரியான நேரமாம்?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: