முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பொடுகு தொல்லைக்கு ஒரே வாரத்தில் தீர்வு - இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க!

பொடுகு தொல்லைக்கு ஒரே வாரத்தில் தீர்வு - இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க!

fenugreek

fenugreek

பொடுகு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஹேர் மாஸ்க் ஒன்றினை வெந்தய விதை மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்தி எப்படி தயார் செய்வது என இந்த பதிவில் நாம் காணலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil |

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களில் ஒன்று பொடுகு (Dandruff). இதன் காரணமாக அரிப்பு, முடி உதிர்வு, வறட்சியான முடி ஆகியவை பிரச்சனைகள் ஏற்படும். அதை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது விஷயம் அல்ல. அதிலும், கோடை காலத்தில் இந்த பொடுகு பிரச்னை மிகவும் அதிகமாக காணப்படும். பொடுகு தொல்லை பல்வேறு காரணங்கள் வருகின்றன.

நீங்களும் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டுவந்தால், பொடுகு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஹேர் மாஸ்க் ஒன்றினை வெந்தய விதை மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்தி எப்படி தயார் செய்வது என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

வெந்தயம் - ஒரு கப்.

எலுமிச்சை பழம் - 1 பழம்.

ஹேர் மாஸ்க் செய்ய கோப்பை ஒன்று.

செய்முறை :

ஒரு பெரிய கிளாஸ் (அ) கோப்பையில் ஒரு கப் வெந்தயம் முழுகும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 8 மணி நேரத்திற்கு நன்றாக ஊற வைக்கவும்.

இதனிடையே எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தினை இரண்டாக வெட்டி சாறு புழிந்து தனியே சேமித்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் இந்த (ஊற வைத்த) வெந்தய விதைகளை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கோப்பைக்கு இதனை மாற்றிக்கொள்ளவும்.

தொடர்ந்து இதில் 4 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள பொடுகு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஹேர் மாஸ்க் ரெடி.

Also Read | வெள்ளரிக்காய் அதிகமாக சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் வருமா..?

பயன்படுத்தும் முறை :

முறையாக தயார் செய்த இந்த மாஸ்கினை கூந்தல் மற்றும் உச்சந்தலைக்கு தடவி மசாஜ் செய்யவும். 20 -30 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு குளித்துவிட நல்ல மாற்றம் தெரியும்.

பயன்கள் :

வெந்தயம் மற்றும் எலுமிச்சை கலவையில் தயார் செய்யப்படும் இந்த மாஸ்க் ஆனது, தலைமுடியின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு கொண்டது. அந்த வகையில் இந்த மாஸ்க் கூந்தல் வறட்சி பிரச்சனைகளை தீர்க்கிறது.

கிரிமி நாசினிப் பண்பு கொண்ட எலுமிச்சை சாறு மற்றும் வெந்தயம் பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த ஹேர் மாஸ்க் ஆனது, கூந்தல் வறட்சியை தடுப்பதோடு பொடுகு பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது.

First published:

Tags: Beauty Hacks, Beauty Tips, Dandruff, Hair loss