2018-ல் சென்னை மக்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்டது என்ன?

இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு வகைகள் குறித்து நகரங்கள் வாரியாக அறிக்கை வெளியிட்டுள்ளன ஸ்விகி மற்றும் உபேர் நிறுவனங்கள்.

Web Desk | news18
Updated: December 22, 2018, 5:42 PM IST
2018-ல் சென்னை மக்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்டது என்ன?
இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு வகைகள் குறித்து நகரங்கள் வாரியாக அறிக்கை வெளியிட்டுள்ளன ஸ்விகி மற்றும் உபேர் நிறுவனங்கள்.
Web Desk | news18
Updated: December 22, 2018, 5:42 PM IST
”இந்தியர்களின் உணவுப் பிரியம் ஒரு நாளும் குறையப்போவதே இல்லை. உள்ளூர் முதல் சர்வதேச உணவுகள் வரை அனைத்தையும் ஆரோக்கியத்துடன் விரும்பி சாப்பிடுகின்றனர்” என்கின்றனர் ஸ்விகி, உபேர் போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் நிறுவனங்கள்.

2018-ல் இந்தியாவில் மிக அதிகமாக இந்தியர்கள் விரும்பி ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகள் குறித்து ஸ்விகி மற்றும் உபேர் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. உபேர் நிறுவன அறிக்கையைப் பொறுத்தவரையில் இந்தியர்கள் மனம் கவர்ந்த உணவாக இந்திய வகை உணவுகளே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்கள் நடத்திய ஆய்வில் இந்திய உணவுகளுக்கு அடுத்தபடியாக அமெரிக்கன், சைனீஸ், இத்தாலியன் மற்றும் மத்திய கிழக்கு உணவு வகைகளை இந்தியர்கள் விரும்பி ஆர்டர் செய்துள்ளனர்.

அதிகமாக ஆர்டர் செய்த நகரங்களின் பட்டியலில் ஹைதராபாத், டெல்லி, சென்னை ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. ஸ்விகி வழங்கிய StatEATistics 2018 அறிக்கையில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதில் பெங்களுரூ, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

இந்நகரங்களில் மக்கள் குளிர்பானங்களை ஆர்டர் செய்யாமல் அதிகமாகப் பழச்சாறுகளை ஆர்டர் செய்கிறார்கள் என்றும் ஸ்விகி கூறியுள்ளது. அஹமதாபாத், சண்டிகர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் பூனே ஆகிய நகரங்கள் வறுத்த கோழி மற்றும் ஃப்ரூட் சாலட் ஆகிய இரண்டு உணவுகளை அதிகளவில் ஆர்டர் செய்துள்ளார்களாம்.

ஸ்விகி ஆர்டர்களில் கடந்த ஆண்டு 43 சதவிகிதம் சைவ உணவுகள் ஆர்டர் இருந்தது. இந்தாண்டில் 62 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாம். சைவ உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டதில் அஹமதாபாத் முதலிடத்தில் உள்ளது. அசைவ உணவுகள் அதிகளவில் ஆர்டர் செய்ததில் ஹைதராபாத் நகரம் முதலிடத்தில் உள்ளது.

மேலும் பார்க்க: கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் பணம்... ஊழியர்களின் நாடகம் அம்பலம்
First published: December 22, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...