ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தந்தையர் தின ஸ்பெஷல் உணவுகள்: சிக்கன் டிக்கா முதல் சீஸ் பர்கர் வரை...

தந்தையர் தின ஸ்பெஷல் உணவுகள்: சிக்கன் டிக்கா முதல் சீஸ் பர்கர் வரை...

காட்சி படம்

காட்சி படம்

எவ்வளவு தான் பரிசுகள் கொடுத்தாலும், பொருட்களாக வாங்கினாலும், உணவின் வழியே அன்பை வெளிப்படுத்துவது என்பது அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த உணவுகளை நீங்களே உங்கள் கையால் சமைத்தால் கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

எந்த ஸ்பெஷல் தினமாக அல்லது தருணமாக இருந்தாலும், சிறப்பு உணவுகளுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக, ஒரு கொண்டாட்டம் என்றாலே உணவு இல்லாமல் நடைபெறாது. பாரம்பரிய கொண்டாட்டங்கள் முதல் நவீன காலத்தில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் வரை எதற்கும் விதிவிலக்கில்லை. காதலர் தினம், அம்மா தினம், பெண்கள் தினம், வரிசையில் சமீபமாக தந்தையர் தினமும் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில், இந்த தந்தையர் தினத்தை நீங்களும் சிறப்பாக்கி, உங்கள் அப்பாவுக்கு ஸ்பெஷல் டிரீட் கொடுக்க வேண்டும் என்றால், இந்த ஃபேன்சி உணவுகளை நீங்களே செய்து கொடுத்து சர்ப்ரைஸ் செய்யலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறு அன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. முதல் முதலாக, 1910 ஆம் ஆண்டு முதல் முறையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு, ஜூன் 19 ஆம் தேதி வரும் தந்தையர் தினத்துக்கு உங்கள் கைகளால் ஸ்பெஷல் ரெசிபிகளை சமைத்து கொடுத்து அசத்தலாம். எவ்வளவு தான் பரிசுகள் கொடுத்தாலும், பொருட்களாக வாங்கினாலும், உணவின் வழியே அன்பை வெளிப்படுத்துவது என்பது அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வழக்கமான இந்திய உணவாக இல்லாமல், வேற்று நாட்டு உணவுகளை நீங்களே செய்து கொடுப்பது மறக்க முடியாத பரிசாகவும், நீடித்திருக்கும் நினைவாகவும் அமையும்.

சமைக்க கடினமாக இருக்குமோ என்று நினைக்க வைத்தாலும், இந்த சுவையான உணவுகளை மிக மிக சுலபமாக செய்யலாம். அப்பாக்கள் தின சிறப்பு உணவுகள் பட்டியல் மற்றும் ரெசிப்பிக்கள் வீடியோ இங்கே!

கிரீன் சில்லி சீஸ்பர்கர்: காரசாரமான ஜூசியான பர்கர்

இன்றைய காலகட்டத்தில் பர்கர் செய்வதெல்லாம் கஷ்டமே இல்லை. வீட்டிலேயே பர்கர் பன் செய்யும் அளவுக்கு பலரும் அடிப்படை பர்கர் செய்முறையை தெரிந்து வைத்துள்ளனர். நீங்கள் அவ்வாறு முழுவதுமாக வீட்டிலேயே தயாரிக்கலாம், அல்லது தேவையான ரெடிமேட் பொருட்களை வாங்கி ஜூசி பர்கராகவும் செய்யலாம்.

பீஃப் பேட்டி மற்றும் சீஸ் ஸ்லைஸ்களை மசாலாக்கள் சேர்த்து கிரில் செய்து பர்கராக செய்யலாம். கிரீன் சில் சீஸ்பர்கரின் ரெசிபி வீடியோ இங்கே.

' isDesktop="true" id="760003" youtubeid="0abZshSrZ7Y" category="food">

சாக்லேட் சீஸ் கேக்: மைக்ரோ வேவ் இல்லாத ஈசி கேக்

கேக் செல்வதற்கு மைக்ரோ வேவ் ஓவன் இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை. சாக்லேட், வெண்ணெய் மற்றும் பிஸ்கட் இருந்தால் இந்த no-bake கேக்கை எளிதாக செய்துவிடலாம். பிஸ்கட்டை பொடித்து கீழ் லேயராக வைத்து, அதற்கு மேல் உருகிய சாக்லேட் சீஸ் சேர்த்து மிக்ஸ் செய்த கலவையை ஊற்றி ஃபிரீஸ் செய்தால் சுவையான கேக் ரெடி! இந்த கேக் ரெசிபிக்கான வீடியோ இங்கே.

also read : உங்கள் அப்பாவை ஸ்பெஷலாக உணர வைக்க இப்படி செய்யுங்கள்..

' isDesktop="true" id="760003" youtubeid="jQIWlEcqpc8" category="food">

வெஜ் செஸ்வான் நூடுல்ஸ்: ஈசி நூடுல்ஸ் ரெசிபி :

மிகவும் எளிதான சமைக்கக்கூடிய ஸ்பெஷல் உணவுகளில் நூடுல்சும் ஒன்று. ஆனால் பலரும் நூடுல்ஸ் சரியாக செய்ய வராது என்று நினைக்கிறார்கள். நூடுல்ஸ் செய்வதில் இரண்டு விஷயங்களை மட்டும் கவனமாக இருக்க வேண்டும். காய்கறிகளை மிகவும் மெல்லியதாக வெட்டி கொள்ள வேண்டும், நூடுல்ஸ் வேக வைக்கும்போது ஒன்று உட்கொள்ளாது கொள்ளாத பதத்தில் எடுக்க வேண்டும். நீங்கள் விரும்பும் காய்கறிகளை மெல்லிதாக நீளமாக அல்லது சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். நூடுல்ஸை வேக வைத்து எடுத்து செஸ்வான் சாஸ், இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்கி எடுத்துக் கொண்டால் சுவையான நூடுல்ஸ் தயார்.

' isDesktop="true" id="760003" youtubeid="Hun4PzJ1InU" category="food">

also read : உங்கள் தந்தை உடனான பந்தத்தை பலப்படுத்திக் கொள்வது எப்படி?

கிரில்டு பீட்சா: காலை உணவுக்கான பீட்சா

காலையில் சாப்பிட பீட்சா கொடுத்தால் நீங்கள் வேண்டாம் என்று மறுப்பீர்களா என்ன? உங்கள் அப்பாவுக்கு, இந்த கிரில்டு பீட்சாவை காலையில் கொடுத்து சர்ப்ரைஸ் செய்யுங்கள். கிரில்டு பீட்சா ரெசிப்பி வீடியோ லிங்க் இங்கே.

' isDesktop="true" id="760003" youtubeid="UD1-inDGk98" category="food">

சிக்கன் டிக்கா பாஸ்டா: அற்புதமான ஃபியூஷன் உணவு

' isDesktop="true" id="760003" youtubeid="d_2qQkYrils" category="food">

இரண்டு விதமான கியுசன்களின் கலவை தான் இந்த சிக்கன் டிக்கா பாஸ்தா! இத்தாலிய பாரம்பரியமான ஆல்ஃபிரெடோ பாஸ்தாவம் சிக்கன் டிக்கா சுவையும் ஸ்பெஷல் நாளுக்கான ஸ்பெஷல் உணவாக அமையும்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Father's Day