Home /News /lifestyle /

சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை தவிர்க்க வேண்டுமா..? உண்மைகளும்... கட்டுக்கதைகளும்..!

சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை தவிர்க்க வேண்டுமா..? உண்மைகளும்... கட்டுக்கதைகளும்..!

மாம்பழம்

மாம்பழம்

சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும் என்பதில்லை. அளவோடு சாப்பிட்டால் மாம்பழம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது தான்.

பழங்களின் ராஜா என குறிப்பிடப்படும் மாம்பழங்களை விரும்பாதவர் யார் தான் இருக்கிறார்கள்.? எனினும் மாம்பழங்களை அதிகம் சாப்பிட கூடாது, அளவாக தான் சாப்பிட வேண்டும் என பல கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆரோக்கியத்தில் சில விளைவுகள் ஏற்படும் என்பது முதல் உடல் வெப்பநிலையில் அதன் தாக்கம் வெளிப்படும் என்பது வரை மாம்பழங்களை அதிகம் சாப்பிட கூடாது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நம் நாட்டை பொறுத்த வரை பல வகையான மாம்பழங்கள் இருந்தாலும் மிக பிரபலமானவை தோதாபுரி, ஹபுஸ், சிந்துரா, பங்கனபள்ளி, ரத்னகிரி, நீலம், மல்கோவா, மால்டா, லாங்ரா, கேசர் உள்ளிட்ட 15 வகைகள். பருவகால பழமான மாம்பழத்தை சுற்றியுள்ள பல உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

மாம்பழம் உடல் எடையை குறைக்க உதவுகிறது..!

மாம்பழத்தில் பல எடை இழப்பு பண்புகள் அடங்கி உள்ளதாக பல வல்லுநர்கள் கூறும் அதே நேரத்தில் பலர் மாம்பழத்தை அதிகம் சாப்பிடுவதற்கு எதிராக எச்சரிக்கின்றனர். கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால் மக்கள் மாம்பழங்களை அதிகம் சாப்பிட துடிக்கின்றனர். ஒரு ஆய்வின்படி, 100 கிலோகலோரி/டி (100 kcal/d) புதிய மாம்பழங்களை 12 வாரங்களுக்கு உட்கொண்ட 27 பேரும் ரத்த குளுக்கோஸ், சி-ரியாக்டிவ் புரோட்டீன் (சிஆர்பி) மற்றும் அஸ்பார்டேட் டிரான்ஸ்மினேஸ் செயல்பாடு மற்றும் மொத்த ஆக்ஸிஜனேற்ற திறன் அதிகரிப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க குறைவை காட்டினர். அதே நேரம் மாம்பழத்தை சாப்பிட்டதால் உடல் எடை, உடல் கொழுப்பு, இரத்த அழுத்தம், இன்சுலின் அல்லது லிப்பிட் ப்ரொஃபைலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை.

எனினும் சில நிபுணர்கள் மாம்பழங்களை அதிகம் சாப்பிட கூடாது என எச்சரிக்கின்றனர். ஏனெனில் இதில் அதிக கலோரி மற்றும் அதிக கார்போஹைட்ரேட் நிறைந்திருப்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.



மாம்பழங்கள் முகத்தில் பருக்களை ஏற்படுத்தும்..

இல்லை. இது உண்மையான கருத்து அல்ல. வைட்டமின் ஏ, சி, இரும்பு, பொட்டாசியம், தாமிரம் போன்ற பல சத்துக்கள் நிறைந்த பழமாக இருக்கிறது மாம்பழம். கோடையில் முகப்பருக்கள் அல்லது சூட்டு கட்டிகள் ஏற்படலாம். ஆனால் அதற்கு மாம்பழம் காரணம் அல்ல, வெப்பத்தின் தாக்கம் காரணமாக இருக்கலாம்.

கோடைக் காலத்தில் லெமன் ஜூஸ் பருகுவதால் இவ்வளவு நன்மைகளா?

சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் :

சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும் என்பதில்லை. அளவோடு சாப்பிட்டால் மாம்பழம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது தான். சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிட கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்க காரணம், பழத்தின் கிளைசெமிக் இண்டெக்ஸ் தான். மாம்பழத்தின் கிளைசெமிக் குறியீடு 51 ஆக உள்ளது. இது நீரிழிவு அல்லாத உணவுகளுடன் (non-diabetic foods) ஒப்பிடும் போது அதிகம். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் கிளைசெமிக் இண்டெக்ஸ்
55-க்கு மேல் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாம்பழம் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும்..

ஆம், மாம்பழங்கள் குளிர்ச்சி தரும் பழங்கள் அல்ல. எனவே உடல் வெப்பநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மாம்பழங்களை சாப்பிடும் முன் தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து, பிறகு சாப்பிடலாம்.



மாம்பழம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது :

ஆம் மாம்பழங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. மேலும் மாம்பழத்தில் உள்ள மாங்கிஃபெரின் கலவை (mangiferin compound) இதய வீக்கத்தை குறைப்பதில் செயலாற்றுகின்றன.

மாம்பழங்கள் ஜீரணத்திற்கு நல்லதா?

ஆம், மாம்பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது சிறப்பான குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் மாம்பழங்களை தயக்கமின்றி சாப்பிடலாம். மாம்பழத்தில் உள்ள அமிலேஸ் கலவைகள் மாவுச்சத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க குடலுக்கு உதவுகிறது.

மாம்பழம் சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும் : ஏன் தெரியுமா..?

ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழங்கள் சாப்பிடலாம்?

மாம்பழத்தில் கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, சர்க்கரை, வைட்டமின் சி, தாமிரம், ஃபோலேட், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, நியாசின், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், மெக்னீசியம் மற்றும் தயாமின் போன்ற பல அத்தியாவசிய கூறுகள் உள்ளன. ஒரு முழு மாம்பழத்தில் 202 கலோரிகள் உள்ளன. 100 கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகள் உள்ளன. இந்நிலையில் ஒரு நாளைக்கு 2 கப் அல்லது 350 கிராமுக்கு குறைவாக சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் மற்ற பழங்களை விட இதில் அதிக சர்க்கரை உள்ளதால் எப்போதுமே மிதமான அளவில் மாம்பழங்களை சாப்பிடுவதே சிறந்ததாக இருக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Health Benefits, Mango

அடுத்த செய்தி