இந்திய வீடுகளில் பெரும்பாலான மக்களால் பலவகைகளில் சமைத்து சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக சுரைக்காய் உள்ளது. இது குக்குர்பிடேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காய்கறி; வெள்ளரி, பாகற்காய், பூசணி, பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற பிற காய்கறிகளும் இந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ளன.
இந்தியாவில் ஹிந்தியில் லௌகி என்றும், ஒடியாவில் லாவ் என்றும், மராத்தியில் துதி என்றும், கன்னடத்தில் சொரேகாய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காய் எடை இழப்பு, நீரிழப்பு, மலச்சிக்கல் மற்றும் இதயத்திற்கு சிறப்பான மருந்தாக விளங்குகிறது. நீரிழிவு நோய்க்கு இது மிகவும் பயனுள்ள தீர்வாகவும் கூறப்படுகிறது.
சுரைக்காய் விஷமாகுமா?
சுரைக்காய் என்ன தான் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், இதில் உள்ள நச்சுக்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். என்னது சுரைக்காயில் நச்சுத்தன்மையா என அதிர்ச்சி அடைய வேண்டாம். சுரைக்காயில் உள்ள குக்குர்பிடசின்கள் எனப்படும் நச்சு டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டு சேர்மங்களைக் கொண்டுள்ளது. இது தாவரணி உன்னி விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சுரைக்காயில் இருந்து சுரக்கப்படும் நச்சாகும்.
கசப்பான சுவை கொண்ட சுரைக்காய் சாறு உடலில் நச்சு எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது மற்றும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்தக்கசிவு, இரத்த சோகை, அதிர்ச்சி மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். ஒருவேளை நீங்கள் சுரைக்காய் ஜூஸ் குடிக்கும் போது, அது கசப்பாக இருந்தால் அதனை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
ஜங்க் ஃபுட் சாப்பிட தோன்றினால் இந்த 3 உணவு பொருட்களை சாப்பிடுங்க... ஆசையே போய்விடும்...
ஒரு ஆராய்ச்சி ஆய்வின்படி, சுரைக்காய் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தோன்றும். விஷத்தின் ஆரம்ப அறிகுறிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு, மேல் இரைப்பை குடல் இரத்தப்போக்கு மற்றும் ஹைபோடென்ஷன் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
50-300 மில்லி குக்குர்பிடாசின் உட்கொள்வது இரைப்பை குடல் ரத்தப்போக்கு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை உருவாக்கலாம் மற்றும் இந்த வரம்பை விட அதிகமான சுரைக்காய் சாற்றை உட்கொண்டால் அறிகுறிகள் கடுமையானதாக இருக்கும் என்பதை ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சுரைக்காய் சயனைடு அளவுக்கு நச்சுத்தன்மை நிறைந்ததா?
2021 ஆம் ஆண்டில், தஹிரா காஷ்யப் என்பவர் தான் கசப்பான சுரைக்காய் சாற்றை பருகியதால் எந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு ஆளானதாக சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில், தான் கசப்பான சுரைக்காய் சாற்றை பருகியதால் கடுமையான வாந்தியால் பாதிக்கப்பட்டதாகவும், இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் கசப்பில்லாத சுரைக்காய் சாற்றை மட்டுமே மக்கள் பருக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் சாப்பிட்ட சுரைக்காய் சாற்றின் நச்சுத்தன்மை சயனைடு அளவுக்கு இருந்ததாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த உணவு வகைகளை ஒருபோதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடவே கூடாதாம்... மீறினால் என்ன ஆகும்..?
கசப்பை அதிக அளவு வைட்டமின் சி என்று தவறாகக் கருதிய அவர், அதை உட்கொண்ட உடனேயே தனக்கு 17 முறை வாந்தி எடுத்ததாகவும், இரத்த அழுத்தம் 40 ஆகக் குறைந்ததாகவும் பகீர் தகவல்களை பகிர்ந்து நெட்டிசன்களை எச்சரித்துள்ளார்.
சுரைக்காயில் நச்சு தன்மை உள்ளதை அறிவது எப்படி?
நீங்கள் சுரைக்காய் ஜூஸ் அருந்த முடிவெடுக்கிறீர்கள் என்றால், அதிலிருந்து ஒரு சிறிய துண்டை வெட்டி எடுத்து பச்சையாக இருக்கும் தோல் பகுதியோடு ருசி பார்க்கவும். ஒருவேளை அது கசப்பாக இருந்தால், உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடவும். அதேசமயம் சுரைக்காய் சாதாரணமாகவும், தண்ணீரை குடிப்பது போன்ற சுவையும் இருந்தால் அதனை பயன்படுத்தலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bottle Gourd