Home /News /lifestyle /

இந்த உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நஞ்சாகும் : கவனமாக இருங்கள்...

இந்த உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நஞ்சாகும் : கவனமாக இருங்கள்...

சூப்பர் ஃபுட்ஸ்  

சூப்பர் ஃபுட்ஸ்  

சூப்பர் ஃபுட்ஸ் பழங்கள் முதல் தானியங்கள் வரை அனைத்து வகையான உணவுகளிலும் உள்ளன. ஆனால் இந்த வகை உணவுகளை நீங்கள் குறிப்பிட்ட அளவுக்குத்தான் சாப்பிட வேண்டும்.

சூப்பர் ஃபுட்ஸ் என்பது கடந்த சில ஆண்டுகளில் உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் ஃபிட்டாக வைத்திருக்கும் நோக்கத்தில் உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் உணவு வகைகள் ஆகும். அதிகபட்ச ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைவான கலோரிகள் இருக்கும் உணவு வகைகள் தான் சூப்பர் ஃபுட்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது. சூப்பர் ஃபுட்ஸ் பழங்கள் முதல் தானியங்கள் வரை அனைத்து வகையான உணவுகளிலும் உள்ளன. ஆனால் இந்த வகை உணவுகளை நீங்கள் குறிப்பிட்ட அளவுக்குத்தான் சாப்பிட வேண்டும். ஆயுர்வேத மருத்துவ நிபுணராக ரேகா ராதாமணி Super Food என்று கூறப்படும் எந்த உணவுகளையெல்லாம் அதிகமாக சாப்பிடக் கூடாது என்பதை பற்றி விவரித்துள்ளார்.

திப்பிலி

லாங் பெப்பர் அல்லது பிப்பாலி என்று கூறப்படும் திப்பிலி நம்முடைய பாரம்பரியமான உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியமான உட்பொருளாகும். ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.திப்பிலி ரசம், திப்பிலி லேகியம், மருந்துபொடி என்பது செரிமானத்துக்கு உதவும் பல்வேறு உணவுகளில் திப்பிலி முக்கிய பங்கு வகிக்கிறது.

திப்பிலியில் எக்கச்சக்கமான மருத்துவ பண்புகள் உள்ளன. திப்பிலியை உணவில் சேர்ப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம், உடல் எடை குறைக்கும் முயற்சியில் பலன் பெறலாம், மாதவிடாய் காலத்தில் வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கலாம்; முக்கியமாக செரிமானத்தை மேம்படுத்தி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகிறது.

இதைப் போல அபரிமிதமான மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை குறைந்த அளவிலேயே அல்லது அவ்வப்போது ஒரு முறை பயன்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் திப்பிலியை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. திப்பிலியை சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.



ஆப்பிள் சைடர் வினிகர்

ACV என்று கூறப்படும் ஆப்பிள் சைடர் வினிகர் சமீப காலத்தில் சூப்பர் ஃபுட்டாக பிரபலமாகி வருகிறது. அமிலத்தன்மையைக் எளிதில் சரி செய்வது முதல், உடல் எடை குறைக்க உதவுவது வரை ACV பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து குடிப்பது உடலின் அமிலத்தன்மையைக் குறைத்து, ஆல்கலைன் தன்மையை அதிகப்படுத்த உதவுகிறது. அதேபோல கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

உங்கள் டீ மற்றும் காபியில் சர்க்கரையின் அளவை கட்டாயம் குறைக்க வேண்டும் : ஏன் தெரியுமா?

அதேநேரத்தில் ACV யை அதிகமாகக் குடிக்கும் போது, ஏகப்பட்ட பக்க விளைவுகள் ஏற்படும் என்று ஆயுர்வேத நிபுணர் கூறுகிறார். தண்ணீரை கலந்து டைலூட் செய்து தான் குடிக்க வேண்டும் என்றாலும், அதிகமாக குடிக்கும் பொழுது இதுவே அசிடிட்டியை உருவாக்கும். இதனால் அல்சர் மற்றும் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம்.



ஐயோடின் உப்பு

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப உப்பில்லாமல் சாப்பிட முடியாது. ஆனால், அதிகமாக உப்பு சாப்பிடுவதால் ஏகப்பட்ட நோய்களும் உருவாகின்றன. அதேபோல, உப்பில் இருக்கும் அயோடின் சத்து குறைவாக இருப்பதால் லட்சக்கணக்கானவர்கள் தைராய்டு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சரி செய்வதற்காக அயோடின் உப்பு என்று செயற்கையாக அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பு கடந்த சில ஆண்டுகளாக சந்தைகளில் கிடைக்கிறது.

அயோடின் சேர்க்கப்பட்ட உப்பை அதிகமாக உணவில் சேர்ப்பது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். சருமத்தில் பிரச்சினை, எரிச்சல், அடிக்கடி தாகம் எடுப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். ஐயோடின் உப்புக்கு பதிலாக இயற்கையான கடல் உப்பு, கறுப்பு உப்பு, சிவப்பு உப்பு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Food, Super Food

அடுத்த செய்தி