ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

என்னது உருளைக்கிழங்கில் பாலா...? முழுமையாக தெரிந்துகொள்ள விவரங்கள் இதோ...

என்னது உருளைக்கிழங்கில் பாலா...? முழுமையாக தெரிந்துகொள்ள விவரங்கள் இதோ...

உருளைக்கிழங்கு பால்

உருளைக்கிழங்கு பால்

உருளைக்கிழங்கு பால் எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும், பால் ஒவ்வாமை இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். உருளைக்கிழங்கு பால் பதப்படுத்தப்படுவதால் பசும்பாலை காட்டிலும் இது சிறந்தது கிடையாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சுமார் 60 முதல் 65 சதவிகித இந்தியர்கள் லாக்டோஸ் அலர்ஜியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாலினால் ஒவ்வாமை ஏற்பட கூடியவர்களாக உள்ளனர்.

சிலருக்கு பால் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். ஆனால், அதனால் அவர்களுக்கு சில அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளதால், பாலை குடிக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். சுமார் 60 முதல் 65 சதவிகித இந்தியர்கள் லாக்டோஸ் அலர்ஜியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாலினால் ஒவ்வாமை ஏற்பட கூடியவர்களாக உள்ளனர். மேலும் இதில் அனைத்து வகையான பால் பொருட்களும் அடங்கும்.

இது போன்றவர்களுக்கு தாவர அடிப்படையிலான பால் சிறந்த மாற்றாக இருக்கும். இவற்றில் பாதாம் பால், அரிசி பால் மற்றும் சோயா பால் போன்றவை அடங்கும். மேலும் இவை மிகவும் பிரபலமாகியும் வருகின்றன. அனைத்து வகையான தாவர அடிப்படையிலான பால் வகைகளும் பிரபலமடைந்து வருவதால், 'உருளைக்கிழங்கு பாலுக்கான' தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த பால் காபியிலும் சேர்க்கப்படுகிறது என்பது புதிய தகவல் பலரையும் மகிழ்ச்சிப்படுத்தும்.

'இந்த புதிய வகை 'உருளைக்கிழங்கு மில்க்' பலரும் கேள்விப்படாததாக இருப்பதால், இது குறித்து இனி விரிவாக தெரிந்து கொள்வோம்.

உருளைக்கிழங்கு பால்

இன்று பசும்பாலுக்கான மாற்றுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், தாவர வகை பால் பிரபலமடைய தொடங்கியது. அப்படித்தான் இந்த உருளைக்கிழங்கு பாலின் தேவையும் அதிகரிக்க தொடங்கியது. இது வேகவைத்த உருளைக்கிழங்கை வடிகட்டுதல் மூலமாகவும், தண்ணீர், ராப்சீட் எண்ணெய் மற்றும் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த பாலானது கிரீம் போல கொஞ்சம் தடிமனாக இருக்கும்.

இந்தியாவில் மட்டுமே விளையக்கூடிய பாரம்பரிய 6 வகை அரிசிகள்... அவை என்னென்ன தெரியுமா..?

உருளைக்கிழங்கு பால் செய்முறை

உருளைக்கிழங்கு பாலை வீட்டிலே தயாரித்து குடிக்க முடியும். இதற்கு முதலில், தோல் நீக்கிய உருளைக்கிழங்கை மென்மையாக மாறும் வரை வேக வைத்து கொள்ளவும். பிறகு அது ஆறியதும், தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கட்டத்தில், பாதாம் அல்லது வெண்ணிலா எசென்ஸை சிறிது சேர்த்து கொள்ளவும். மேலும் இதில் உங்களுக்கு பிடித்த எந்த சுவையையும் சேர்க்கலாம். அடுத்து இந்த பாலை மென்மையாகும் வரை நன்றாக கலக்கவும். பிறகு இதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும். இதை சரியான சுவையை பெற அதிக தண்ணீரையும், தேவையான அளவு சர்க்கரையையும் சேர்த்து கொள்ளவும். பின், குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர வைக்கவும். குளிர்ந்த பிறகு இதை சாப்பிடலாம்.

ஆரோக்கிய பயன்கள்

வெறும் 39 கலோரிகள் மற்றும் 0.1 கிராம் நிறைவுற்ற கொழுப்புகள் இதில் இருப்பதால், உருளைக்கிழங்கு பால் மிகவும் ஆரோக்கியமானது மற்றும் பாதுகாப்பானது. ஆனால் இந்த பாலில், சோயா மற்றும் பாதாம் பால் போன்று இல்லாமல் குறைவான அளவில் புரத சத்து கொண்டுள்ளது. மேலும் இதில், கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி12, ரிபோஃப்ளேவின், ஃபோலிக் அமிலம் போன்றவையும் நிறைந்துள்ளது. உருளைக்கிழங்கு பாலில் குளுட்டன் இல்லாததால், இது ஒவ்வாமை உள்ள எவருக்கும் பாதுகாப்பான பானமாக அமைகிறது.

ஒமேகா-3 சப்ளிமெண்ட்ஸ் அதிகமாக எடுத்து கொள்வதால் உடலுக்கு இவ்வளவு பாதிப்பா..!

உருளைக்கிழங்கு பால் எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும், பால் ஒவ்வாமை இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். உருளைக்கிழங்கு பால் பதப்படுத்தப்படுவதால் பசும்பாலை காட்டிலும் இது சிறந்தது கிடையாது. ஏனெனில் இயற்கையாகவே அனைத்து ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதங்களைப் பெறுவதே சிறந்ததாகும்.

First published:

Tags: Milk, Potato